ETV Bharat / state

ஜூலை 11ஆம் தேதி சட்டப்படி பொதுக்குழு நடத்தமுடியாது - வைத்திலிங்கம் பேட்டி!

author img

By

Published : Jun 24, 2022, 4:31 PM IST

Updated : Jun 24, 2022, 4:57 PM IST

வைத்திலிங்கம் பேட்டி
வைத்திலிங்கம் பேட்டி

வரும் ஜூலை 11ஆம் தேதி சட்டப்படி பொதுக்குழு நடத்த முடியாது என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது சொந்த ஊரான தஞ்சாவூர் செல்லும் வழியில் பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியான திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வரும்போது பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டச் செயலாளர் RT இராமச்சந்திரன் தலைமையில் அவருக்கு மேளதாளத்துடன், அவருக்கு மாலை அணிவித்து மலர்க்கொத்து கொடுத்து, வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சி.வி.சண்முகம் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள நபர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக வெளியிட்ட தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,

'நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு இருப்பதால் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அவர்கள் சொல்லும் கருத்தை ஏற்க முடியாது’ என்றார்.

வைத்திலிங்கத்துக்கு அதிமுகவினர் அளித்த உற்சாக வரவேற்பும் அதன்பின்னர் அவர் பேட்டியும்....

மேலும், ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, ’சட்டப்படி பொதுக்குழு நடத்த முடியாது’ எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது திரளான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'கல்வி வளர்ச்சியில் 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கும் தமிழ்நாடு.. அதற்குத் தடையான தேசிய கல்விக் கொள்கை வேண்டாம்' - முரசொலி தலையங்கம்

Last Updated :Jun 24, 2022, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.