ETV Bharat / state

மானை வேட்டையாடிய நாய்கள்- அதிர்ச்சி வீடியோ

author img

By

Published : May 16, 2022, 8:39 AM IST

மானை வேட்டையாடிய நாய்கள்- அதிர்ச்சி வீடியோ
மானை வேட்டையாடிய நாய்கள்- அதிர்ச்சி வீடியோ

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காட்டில் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வந்த மான் ஒன்றை நாய்கள் வேட்டையாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், பாண்டகப்பாடி, சித்தெளி, திருமாந்துறை, தண்ணீர் பந்தல் என மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள காப்புக்காடுகளிலும், வனப்பகுதிகளிலும் அரிய வகை புள்ளி மான் மற்றும் கிளை மான்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.

இவ்வாறு வாழும் மான்கள் கோடைக்காலத்தில் ஏற்படும் வறட்சியை தாக்குப்பிடிக்கமுடியால் தண்ணீருக்காவும், இறை தேடியும் குடியிருப்பு பகுதிக்கும், விளைநிலங்களுக்கும் வருவதால் நாய்கடித்தும், கிணறுகளில் தவறி விழுந்தும் உயிரிழந்து வருகின்றன. இதுபோல கூட்டம் கூட்டமாக வரும் மான்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது, வாகனங்கள் மோதி உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மானை வேட்டையாடிய நாய்கள்- அதிர்ச்சி வீடியோ

அந்த வகையில் நேற்று(மே 15) காலை பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகருக்கு வந்த மான் கூட்டத்தை நாய்கள் விரட்டியபோது, மற்ற மான்கள் தப்பியோடிவிட்ட நிலையில் ஒரு ஆண் கிளை மான் மட்டும் நாய்களிடம் சிக்கிக்கொண்டது. அந்த மானை 3க்கும் மேற்பட்ட நாய்கள் வேட்டையாடிய நிலையில், மான் தப்பிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் நாய்களை விரட்டியதால், மான் பலத்த காயங்களுடன் தப்பியோடியது. அருகில் உள்ள வீட்டின் சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டொன்றுக்கு இது போல 100க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி வரும் நிலையில் இதனை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:டிப் டாப் உடை அணிந்து சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.