ETV Bharat / state

சொர்க்க வாசல் திறப்பு: ராசிபுரம் பெருமாளுக்கு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

author img

By

Published : Dec 30, 2022, 7:39 AM IST

Updated : Dec 30, 2022, 4:48 PM IST

50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்
50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ராசிபுரம் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் காண வரும் பக்தர்களுக்கு ஜணகல்யாண் சார்பில் 50 ஆயிரம் லட்டுக்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நாமக்கல்: தமிழ்நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க, பெருமாளை வணங்கும் பக்தர்கள் பகல் பத்து, ராப்பத்து விரதமிருந்து பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை வணிங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாளாக கொண்டாடப்படுகிறது.‌ அதன்படி வருகின்ற 02.01.2023 அன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில், வரும் ஜனவரி 2 திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். அன்றைய தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் காண வரும் பக்தர்களுக்கு ஜனகல்யாண் சார்பில் 32ஆம் ஆண்டாக லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

இதற்காக 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.‌ இதற்காக 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1,000 லிட்டர் கடலெண்ணெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்டவை 5 கிலோ உள்ளிட்ட பொருட்களை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியில் கோயில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்திய அளவில் திருப்பதிக்கு 2ஆம் இடம்.. எதில் தெரியுமா.?

Last Updated :Dec 30, 2022, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.