ETV Bharat / state

பூஸ்டர் தடுப்பூசி முகாம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

author img

By

Published : Feb 6, 2022, 9:10 AM IST

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

தமிழ்நாட்டில் படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் தடுப்பூசி, தகுந்த இடைவெளி, விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் இருபத்தி ஒன்றாவது மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “தமிழ்நாட்டில் 21ஆவது கரோனா பூஸ்டர் ஊசி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் நடைபெற்ற இலக்கு 7 கோடியே 91 லட்சத்து 889 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த டோஸ்சஸ் 9.67 கோடி தவணை போடப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டோர் 5 கோடியே 25 லட்சமும், இரண்டாவது டோஸ் 4.05 கோடியும், முதல் தவணை 90.75 விழுக்காடும், இரண்டாவது தவணை 70.02 விழுக்காடும், இதுவரைக்கும் 70 விழுக்காடை தாண்டி உள்ளோம் ஒட்டுமொத்தமும் 9.67 கோடி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

மயிலாடுதுறை, ராணிபேட்டை, தென்காசி போன்ற சில மாவட்டங்களில் இன்னமும் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் உள்ளது. எனது அன்பான வேண்டுகோள், இது பேரிடர் மாவட்டம் என்பதால் உலகளவில் தடுப்பூசி போட்டததால் தான் மூன்றாம் அலை இறப்பு கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.

உலக அளவில் மக்கள் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் 1.35 லட்சம் படுக்கையறைகள் இருக்கும் வகையில் நான்கு விழுக்காடு நோய் தொற்று உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

பொதுமக்கள் கட்டாய தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்திய அளவில் ஏறுமுகமாக இருந்த கரோனா தொற்று தற்பொழுது இறங்குமுகமாக இருந்து வருகிறது இதற்கு காரணம் அனைத்து மக்களும் தடுப்பு ஊசி செலுத்தியதே காரணம் தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2,000 பேர் வீதம் தொற்று குறைந்து வருகிறது. தேர்தலுக்காக குறைவதாக கூறிவருகின்றனர் என பலர் கிண்டலாகவும் பேசி வருகின்றனர். இதற்கான காரணம் பொதுமக்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி, தடுப்பூசி செலுத்தி கொண்டதாகும்” எனத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இச்சந்திப்பின் போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சீர்காழி கோட்டாட்சியர் ஜி.நாராணன், சுகாதாரத்துறையினர் உடனிருந்தனர்.தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வைத்தீஸ்வரன்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படிங்க: 'வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது' - கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 4ஆம் வகுப்பு மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.