ETV Bharat / state

"தமிழகத்தில் 4 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்" - கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர்!

author img

By

Published : Aug 13, 2023, 10:39 PM IST

“தமிழகத்தில் இதுவரை 4 லட்ச இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்” - பொன் குமார் தகவல்!
“தமிழகத்தில் இதுவரை 4 லட்ச இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்” - பொன் குமார் தகவல்!

உலக இளைஞர் தினத்தையொட்டி மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக் கூட்டத்தில் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு பேசினார்.

“தமிழகத்தில் இதுவரை 4 லட்ச இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்” - பொன் குமார் தகவல்!

நாகப்பட்டினம்: ஆண்டுதோறும் உலக இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ஆம் தேதி இளைஞர்களை கொண்டாடும் வகையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் உலக இளைஞர் தினத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் உலக இளைஞர் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த நிலையில் அதை நடைமுறை படுத்தப்பட்டும் உள்ளன. குறிப்பாக, இளைஞர்களின் திறனை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் துறையில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இதுவரை 4 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கல்வியிலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தவே இட ஒதுக்கீடு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் மருத்துவக் கல்வியை சிதைக்கும் வகையில் மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்தி உள்ளது. அதனை விலக்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதையும் படிங்க: அண்ணே அந்த பணப் பை..! பிரதமரால் பாராட்டப்பட்ட சலூன் நூலகத்திற்கு அண்ணாமலை விசிட்!

இந்த நிலையில் தமிழக ஆளுநர் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கூறி உள்ளதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சட்டப்பேரவை தீர்மானத்தை மதிக்காத ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் இந்தியாவின் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து ஏற்கனவே தரங்கம்பாடிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை மீண்டும் இயக்கி அதனை காரைக்கால் வரை நீடித்து மக்களை பயன் அடைய வைக்கவேண்டும்.

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வோர் மற்றும் கட்டுமான அமைப்புகளை இணைத்து விலை நிர்ணய குழு அமைத்து அதன் கூட்டத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வோர் மற்றும் நல வாரிய அமைப்புகளை இணைத்து விலை நிர்ணய குழுவை அமைத்தால் மட்டுமே கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அரசின் பெருமை பேசுவதை விடுத்து, மாணவர்களை கவனிக்க வழி செய்க" - பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.