ETV Bharat / state

‘கரையோர கிராமங்களை பாதுகாக்க தயார் நிலையில் மீட்பு குழு’- ஆட்சியர் லலிதா

author img

By

Published : Oct 17, 2022, 9:41 PM IST

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு- கலெக்டர் ஆய்வு!
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு- கலெக்டர் ஆய்வு!

கொள்ளிடம் ஆற்றின் கரையை பாதுகாக்க 25 ஆயிரம் மணல் மூட்டைகளும், சவுக்கு கட்டைகளும் மீட்பு பணிக்காக படகுகளுடன் தீயணைப்பு துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை கர்நாடக மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையும் முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது.

இன்று(அக்.17) மாலை ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் லலிதா கூறியதாவது, கொள்ளிடம் ஆற்றில் தற்போது 90 ஆயிரம் கன அடி வெள்ளநீர் செல்லும் நிலையில் மாலை 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கபடுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகபடியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கபடும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு- கலெக்டர் ஆய்வு!

ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் நீளம் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர்,படகுகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:புகைப்படங்களை தொட்டு உணரும் தொடுதிரை தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஐஐடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.