செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே

author img

By

Published : Jan 23, 2023, 10:51 PM IST

செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி மாத இறுதி வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை புதன்கிழமைகளில் செகந்திராபாத்திலிருந்து இரவு 09.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்திலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள் நலங்கொண்டா, மிரியாலகுடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அரசு வேலையை வரதட்சனையாக கேட்ட கணவன்.. மனைவி எடுத்த அதிரடி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.