ETV Bharat / state

தமிழ்நாடு கல்விக் கொள்கையில் யாரும் கை வைக்க முடியாது - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : Oct 23, 2020, 12:09 AM IST

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: தமிழ்நாடு கல்விக்கொள்கையில் கை வைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக 79 திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளார். அதன்படி மதுரையில் 80ஆவது வார்டு, முத்து மீனாட்சி மருத்துவமனை வார்டு 13, புட்டுத்தோப்பு வார்டு 9 அருள்தாஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 26. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகள் கொண்ட டாப்ளர் ஸ்கேன் கருவிகள் அளித்துள்ளார்.

இதன்மூலம் கர்ப்பிணி பெண்கள் பெருமளவு பயன்படும் வகையில் வயிற்றில் உள்ள குழந்தையின் உயரம், எடை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும் . குழந்தை உருவாக்கத்தின் நிலைகளைத் தெரிந்து கொள்ளலாம். லீனியர் கருவிகள் மூலமாக மார்பகம் தைராய்டு ரத்தநாளம் குறித்த பிரச்னைகளை அறிந்து கொள்ள முடியும். மதுரை மாநகராட்சியில் முதல்முறையாக இந்தத் திட்டப் பணிகள் மத்திய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கல்விகொள்கையில் யாரும் தொட முடியாது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பிடிஆர் தியாகராஜன், "தமிழ்நாடு கல்விக் கொள்கையின் மீது கை வைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற தேனியைச் சேர்ந்த ஜிவித்குமார் தமிழ்வழி அரசு பள்ளியில் படித்திருந்தாலும், தனியார் மையத்தில் பயிற்சி பெற்றதால் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். நீட் தேர்வு போன்ற பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் உறங்குகிறதா" என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: மீனாட்சி கோயிலில் 6ஆம் நாள் நவராத்திரி விழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.