ETV Bharat / state

மஹாளய அமாவாசை... மதுரையில் இருந்து காசிக்கு சுற்றுலா ஏற்பாடு... ரயில்வே தகவல்

author img

By

Published : Aug 23, 2022, 5:27 PM IST

irctc kasi flight
irctc kasi flight

புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மதுரையிலிருந்து பல்வேறு ஆன்மிக சுற்றுலா யாத்திரைகளை நடத்தி வருகிறது. தற்பொழுது புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிகத் தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா அழைத்துச்செல்ல இருக்கிறது.

இந்த 6 நாட்கள் சுற்றுலா செப்டம்பர் 24அன்று மதுரையில் இருந்து தொடங்குகிறது. விமானக்கட்டணம் உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம்,உணவு,பயணக்காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூ.39,300 கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும்.

அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8287931977 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதளம் மூலமும் பயணச்சீட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வேயின் மதுரைக்கோட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணிக்கலாம் - தென்னக ரயில்வே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.