ETV Bharat / city

முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணிக்கலாம் - தென்னக ரயில்வே

author img

By

Published : Aug 23, 2022, 7:30 AM IST

Updated : Aug 23, 2022, 9:33 AM IST

சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய தென்னக ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் டிரிசர்வ்டு ( Dereserved ) பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும். கும்பகோணம் வழியே செல்லும் எழும்பூர் - ராமேஸ்வரம் ரயிலில் எஸ் 12 , எஸ் 13 பெட்டிகள் டிரிசர்வ்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அதேபோல தூத்துக்குடி - மைசூர் ரயிலில் (16235) அக்டோபர் 28 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும். இந்த டிரிசர்வ்டு ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக தூத்துக்குடி - மதுரை இடையே ரயிலில் பயணம் செய்ய முன் பதிவற்ற கட்டணம் ரூபாய் 70, முன் பதிவு கட்டணம் ரூபாய் 145, டிரிசர்வ்டு கட்டணம் ரூபாய் 110 என வரையறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆசியக் கோப்பை தொடர்... இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா விலகல்...

Last Updated :Aug 23, 2022, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.