ETV Bharat / state

பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறும் காளைகள்..  விடாமல் பிடிக்கும் வீரர்கள்..

author img

By

Published : Jan 16, 2023, 9:37 AM IST

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு
தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்ட காளைகளை பிடிக்க உள்ளனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்ட பின் போட்டி தொடங்கியது.

ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சுற்று நடைபெறுகிறது. முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டுவருகிறது.

போட்டியில் முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் ஒன்றும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக் ஒன்றும் முதல் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பாக வழங்கப்படவுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளைக்கு அலங்காநல்லூரை சேர்ந்த பொன் குமார் சார்பில் கறவை பசு மாடு கன்றுடன் பரிசு வழங்கப்பட உள்ளது. இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும் பைக், தங்க காசு, லேப்டாப், குக்கர், எல்.இ.டி TV, பிரிட்ஜ், தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், போட்டியில் முதல் சுற்று முடிவடைந்தது. அதில், 7 காளைகளை அடக்கி ராஜா என்பவர் முதல் இடத்தையும், 6 காளைகளை அடக்கி அரவிந்த் என்பவர் இரண்டாம் இடத்தையும், மூன்று காளைகளை அடக்கி அஜித்குமார் என்பவர் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: IND Vs Eng Hockey: இந்தியா - இங்கிலாந்து அணிகள் லீக் ஆட்டம் டிரா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.