ETV Bharat / bharat

IND Vs Eng Hockey: இந்தியா - இங்கிலாந்து அணிகள் லீக் ஆட்டம் டிரா...

author img

By

Published : Jan 15, 2023, 10:27 PM IST

உலக கோப்பை ஹாக்கி தொடரில் டி பிரிவில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.

IND Vs Eng Hockey
IND Vs Eng Hockey

ரூர்கேலா(ஒடிஷா): 15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புபனேஸ்வர் ஆகிய நகரங்களில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தொடர் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று ஹாக்கி தொடரின் தொடக்க விழா வண்ண வண்ண விளக்குகளுக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு 14-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. 4 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சொந்த ஊரில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதன் மூலம் தொடர்ச்சியாக இருமுறை ஹாக்கி தொடரை நடத்திய முதல் நாடு என்ற சிறப்பு பெருமையை இந்தியா பெற்றது.

தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளும் 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆன பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான் அணிகளும் உள்ளன.

‘சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி நாடுகளும், 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும்.

அதேநேரம் அனைத்து பிரிவுகளிலும் 2 மற்றும் 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து 4 அணிகள் கால்இறுதிக்குத் தேர்வாகும்.

ரூர்கேலாவில் இன்று (ஜன.15) நடந்த டி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் பதிவு செய்ய கடுமையாக முயற்சித்தன. ஆனால் அந்த முயற்சியில் இரு அணிகளும் இறுதி வரை வெற்றி பெறவில்லை.

ஆட்ட்த்ஜ்தில் இரு அணிகளுக்கும் கோல் பதிவு செய்யும் அதிக வாய்ப்பு கிடைத்த போதும் நேர்த்தியா தடுப்பாட்டம் உள்ளிட்ட காரணங்களால் கோல் வாய்ப்புகள் தவறிப்போயின. பெனால்டி வாய்ப்புகள் கிடைத்த போது அதை இரு அணி வீரர்களால் கோலாக மற்ற முடியவில்லை. இதனால் ஆட்டம் கோல்களே அடிக்கப்படாமல் டிராவில் முடிந்தது.

டி பிரிவில் கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்தியா இப்போது 2-வது இடத்தில் உள்ளன. குரூப் சுற்றில் முதலிடம் பிடிக்கவும், கால் இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறவும் வரும் 19-ம் தேதி நடைபெறும் வேல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அதிக கோல் கணக்கில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IND VS SL 3rd ODI: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.