ETV Bharat / state

ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் பெண்ணை விடுவிக்க உத்தரவு!

author img

By

Published : Aug 24, 2019, 7:25 PM IST

madurai HC

மதுரை: காப்பகத்தில் உள்ள மதம் மாறிய பெண்ணை உடனடியாக விடுவிக்க ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் தமிழ் மலர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், "மதுரையை சேர்ந்த தாரை செல்வன் என்பவரின் மகள் குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ். இவர் பல் மருத்துவம் படித்துள்ளார். இந்நிலையில் இஸ்லாம் மதத்தின் மீதான ஈர்ப்பால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உதவியுடன், இந்து மதத்தை சார்ந்த இவர் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார். இந்தத் தகவலை அறிந்தவுடன், இவரது பெற்றோர் இவரை வீட்டில் சிறை வைத்தனர்.

இதற்கிடையே இவர் வீட்டில் இருந்து தப்பி, ஜமையத்துல் வகிலில் குரான் வல் ஹதீஸ் என்ற இஸ்லாமிய அமைப்பின் உதவியை நாடினார். ஜன்னதுல் பிர்தொஸ் தனக்கு பாதுகாப்பும், அடைக்கலமும் கேட்டார். குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ் குறித்து அவரது பெற்றோர் மதிச்சியம் காவல் நிலையித்தில் புகார் கொடுத்தனர். இதே போல், ஜன்னதுல் பிர்தொஸ் போலீசாருக்கு ஒரு மனுவை அனுப்பினார். அதில் பெற்றோர்களால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில் போலீசார், ஜன்னதுல் பிர்தொஸ் மதுரையில் உள்ள பேட்ரிக் என்ற காப்பகத்தில் தங்க வைத்தனர். இவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தாமல், சட்ட விரோதமாக தங்க வைத்துள்ளனர். தனக்கு பிடித்த மதத்தை தழுவுவது என்பது அவரவரின் விருப்பம், தனி நபரின் உரிமை எனவே போலீசார் சட்டவிரோதமாக காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவரை விடுதலை செய்ய வேண்டும். அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், காப்பகத்தில் சட்ட விரோதமாக வைத்துள்ள பெண்ணுக்கு 27 வயதாகிறது. அவர் தன் விருப்பப்படி சுதந்திரமாக எந்த மதத்தையும் பின்பற்றலாம், அவர் விருப்பப்படி இருக்கலாம். எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரினார். இதை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அந்தப் பெண் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை காதலிப்பதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு தரப்பு புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், காப்பகத்தில் உள்ள குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ் விடுவிக்கப்பட வேண்டும். அவர் சுதந்திரமாக எங்கு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

Intro:காப்பகத்தில் உள்ள மதம் மாறிய பெண்ணை உடனடியாக விடுவிக்க ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மகள் மதம் மாறியதால் பெற்றோர் எதிர்ப்பு,vஇரு தரப்பு புகார்களால் காப்பகத்தில் உள்ள 27 வயது இளம் பெண்ணை, உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுவில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.Body:காப்பகத்தில் உள்ள மதம் மாறிய பெண்ணை உடனடியாக விடுவிக்க ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மகள் மதம் மாறியதால் பெற்றோர் எதிர்ப்பு,vஇரு தரப்பு புகார்களால் காப்பகத்தில் உள்ள 27 வயது இளம் பெண்ணை, உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுவில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

மதுரை வழக்கறிஞர் தமிழ் மலர், உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மதுரையை சேர்ந்த தாரை செல்வன் என்பவரின் மகள் குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ். இவர் பல் மருத்துவம் படித்துள்ளார் .இவர் இந்து.

இந்த நிலையில் இஸ்லாம் மதத்தின் மீதான ஈர்ப்பால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உதவியுடன், இஸ்லாம் மதத்தை தழுவினார். இந்த தகவல் அறிந்தவுடன், இவரது பெற்றோர் இவரை வீட்டில் சிறை வைத்தனர்.

இதற்கிடையே இவர் வீட்டில் இருந்து தப்பி, ஜமையத்துல் வகிலில் குரான் வல் ஹதீஸ் என்ற இஸ்லாமிய அமைப்பின்
உதவியை நாடினார்.ஜன்னதுல் பிர்தொஸ் தனக்கு பாதுகாப்பும் அடைக்கலமும் கேட்டார் .

குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ் குறித்து அவரது பெற்றோர் மதிச்சியம் காவல் நிலையித்தில் புகார் கொடுத்தனர். இதே போல், குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ் போலீசாருக்கு ஒரு மனு அனுப்பினார்.
அதில் பெற்றோர்களால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறியிருந்தார்.

தற்போது போலீசார், குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ் மதுரையில் பேட்ரிக் என்ற காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தாமல், சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.

தனக்கு பிடித்த மதத்தை தழுவுவது என்பது அவரவரின் விருப்பம்,தனி நபரின் உரிமை எனவே போலீசார் சட்டவிரோதமாக காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவரை விடுதலை செய்ய வேண்டும். அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் ..

இந்த மனு நீதிபதிகள், சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், காப்பகத்தில் சட்ட விரோதமாக வைத்துள்ள பெண்ணுக்கு 27 வயதாகிறது.

அவர் தன் விருப்பபடி சுதந்திரமாக எந்த மதத்தையும் பின் பற்றலாம், அவர் விருப்படி இருக்கலாம். எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரினார் .

இதை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அந்த பெண் ,இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை காதலிப்பதால் இந்த சம்பவம் நடந்துள்ளது, இரு தரப்பு புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு, போலீசார் அறிவுறுத்தல் படி காப்பகத்தில் உள்ள குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ் விடுவிக்க வேண்டும். அவர் சுதந்திரமாக எங்கு இருக்கலாம் என முடிவு செய்யலாம் என உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.