ETV Bharat / state

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஒரு காவல்துறை அதிகாரியை குற்றம் சாட்டி 'சிபிஐ' தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ரத்து..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 9:23 PM IST

madurai-chief-criminal-court-quashes-final-chargesheet-filed-by-cbi-in-sterlite-firing-case
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: சிபிஐ ஒரு காவல்துறை அதிகாரியை குற்றம் சாட்டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ரத்து..!

Sterlite case CBI charge sheet cancel: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தரப்பில் ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. மேலும், சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் புதிய குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் (மே.2018) போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தார்கள்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியது. துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்திபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அனுப்பினார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதன் அடிப்படையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ விசாரணையை முடித்துக் காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது. சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐயின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி சண்முகையா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலைகள் வழக்கில், ஒரு ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்த நீதிபதி, மீண்டும் இந்த வழக்கில் சிபிஐ மீண்டும் புலன் விசாரணை செய்து 6 மாதத்திற்குள் புதிய இறுதி குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "புயல் பாதிப்புகளிலிருந்து வெளிவர மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது" - ராஜ்நாத் சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.