ETV Bharat / state

போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் - நீதிபதிகள் எச்சரிக்கை!

author img

By

Published : Jul 20, 2023, 8:10 AM IST

போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

போதிய ஆவணங்கள் இல்லாமல், பொதுவான பல கோரிக்கைகளை முன் வைத்து பொது நல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை: பொது நல வழக்குகளை, மனுதாரர்கள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யக் கூடாது என்றும், போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுவான பல கோரிக்கைகளை முன் வைத்து பொது நல வழக்கு தாக்கல் செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், “நெல்லை மாவட்டம் களக்காடு நவநீதகிருஷ்ணன் கோயில் தெப்பக்குளம், ராமலட்சுமி மருத்துவமனை எதிரில், சேரன்மகாதேவி மற்றும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முதல் கன்னடியன் கால்வாய் பாலம் வரை மற்றும் அம்பாசமுத்திரம் வளைவு முதல் அம்பாசமுத்திரம் ரயில்வே கேட் வரை போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு வாதம்!

இந்த மனு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பொது நல வழக்குகளை மனுதாரர்கள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யக் கூடாது. பொது நல வழக்குகளை தாக்கல் செய்வதற்கு முன், தொடர்புடைய அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும்.

மனு அளித்தும் அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை என்றால், பொது நல வழக்கிற்காக ஆய்வு மேற்கொண்டு, அதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் புள்ளி விபரங்களுடன் பொது நல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும், பொது நல வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் இல்லாமல் பொதுவான பல கோரிக்கைகளை மட்டும் முன் வைத்து பொது நல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்” என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம்: முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றக்கிளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.