ETV Bharat / state

கணவனிடமிருந்து குழந்தையை மீட்க ஆட்கொணர்வு மனு - உயர்நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு

author img

By

Published : May 17, 2023, 7:41 PM IST

Etv Bharat
Etv Bharat

கணவன் மனைவி இடையேயான பிரச்னையில் குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரி, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தனது கணவரிடம் இருந்து குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணையில், இத்தகைய விவகாரங்களுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காணலாம் எனவும் கணவன், மனைவி பிரச்னையில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதை ஆட்கொணர்வு (Habeas corpus) மனுவாக விசாரிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜு என்பவர் சட்ட விரோதமாக தனது கணவரால் கடத்திக் கொண்டுப் போய் வைக்கப்பட்டுள்ள தனது குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'தனது இரண்டு குழந்தைகளை கணவர் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு போய் வைத்துள்ளார். எனவே, எனது மகன் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி' ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வு முன்பு இன்று (மே 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வாழ்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கின் மனுதாரருக்கும் எதிர்மனுதாரருக்கும் 2002ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் முதல் மகன் ஏற்கனவே 18 வயதை பூர்த்தி அடைந்துவிட்டார்.

எனவே, அவருக்கு இந்த வழக்கில் நிவாரணம் வழங்க இயலாது. அதேபோல், மகளுக்கு ஏழு வயது ஆகிரது. தனது கணவர் ஆனந்த் என்பவர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டதாக மனைவி குற்றம் சாட்டுகிறார். கணவன் மனைவி உள்ள பிரச்னையால் குழந்தைகளை அழைத்துச் செல்லப்பட்டதே ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது. சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்' என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நீலகிரி ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.