ETV Bharat / state

‘கட்சியின் தத்துவத்திற்கு ஏற்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்’ - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : Apr 9, 2023, 9:57 PM IST

புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்
புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர் உறுப்பினர் சேர்க்கை குறித்து பகுதி வட்ட கழக கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் தத்துவத்திற்கு ஏற்ப கட்சி உறுப்பினர்களை சேர்ப்பதுதான் சிறப்பான முயற்சி என்றார்.

புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

மதுரை: மத்திய சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள, புதிய அங்கன்வாடி கட்டடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர், மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா உறுப்பினர் சேர்க்கை குறித்து பகுதி வட்ட கழக கூட்டத்தில் பேசிய அவர் “எந்தவொரு இயக்கத்திற்கும் உள்ள முக்கிய திறன் தேர்தலில் வெற்றி பெறுவது தான்.

அரசியல் இயக்கம் என்றால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஒரு அரசியல் கட்சியான நாம் நம் கொள்கை தத்துவத்தின் அடிப்படையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து சட்டங்களை, திட்டங்களை மக்களின் நலனுக்கு தீட்டி செயல்படுத்தினால் தான் மக்களிடம் வெற்றி பெற முடியும்.

தேர்தல் வெற்றி பெறுவது தான் இயக்கத்தின் வெற்றி. அரசியல்வாதியின் நிரந்தர சக்தி தேர்தலில் வெற்றி பெறுவது தான். தேர்தலில் வென்று கொண்டே இருப்பது தான் நிரந்தர சக்தி. தோல்வி என்ற வார்த்தையே காணாத தொகுதி நம் மதுரை மத்திய தொகுதி. 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் மதுரையில் இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அதில் ஒன்று மதுரை மத்திய தொகுதி.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் முதல் ஏரியா சபை கூட்டம்; மற்ற வார்டுகளிலும் நடத்த வலியுறுத்தல்

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மக்களிடம் பாசம் பிணைப்பு இருந்தால் தொடர்ந்து வெற்றி பெறுவோம். இன்னும் கூடுதல் வாக்காளர்களை சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எங்கு பலவீனமாக உள்ளோம் என்பதை கண்டறிந்து வலுப்படுத்த வேண்டும். கழகத்தின் தத்துவத்திற்கு ஏற்ப உறுப்பினர்களை சேர்ப்பது தான் சிறப்பான முயற்சி” எனக் கூறினார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை புத்தகத் திருவிழா - பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.