ETV Bharat / state

சென்னை மாநகராட்சியில் முதல் ஏரியா சபை கூட்டம்; மற்ற வார்டுகளிலும் நடத்த வலியுறுத்தல்

author img

By

Published : Apr 9, 2023, 7:23 PM IST

சென்னை மாநகராட்சியில் முதல் ஏரியா சபை கூட்டம்
சென்னை மாநகராட்சியில் முதல் ஏரியா சபை கூட்டம்

சென்னையில் முதல்முறையாக திருவொற்றியூர் மண்டலத்தில் ஏரியா சபை நடத்தப்பட்டதையடுத்து விரைவில் மண்டலத்திலும் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை: கிராமப்புற பகுதிகளில் ஜனவரி 26ஆம் தேதி கிராமசபை (Gram Sabha) நடைபெறுவது வழக்கம். ஆனால் சென்னை போன்ற பெரிய நகரகளில் இதுபோன்று சபைகள் எதும் நடைபெறுவதில்லை. நகரகளிலும் ஏரியா சபை (Urban councils) நடத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாளான கோரிக்கையாக இருந்து வருகிறது. இதில் கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் வார்டு தேர்தல் (உள்ளாட்சி தேர்தல்) நடைபெறாமல் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகளே மக்கள் தேவை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று திமுக மாமன்ற உறுப்பினர் பிரியா ராஜன் மேயராக பதவி ஏற்றார். அதற்குப் பிறகு பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த முறை ஜனவரி 26 ஆம் தேதி அன்று ஏரியா சபை நடைபெறும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் நிர்வாகத்தின் காரணமாக அது நடைபெறாமல் தள்ளிப்போனது. விரைவில் ஏரியா சபை நடைபெற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் முதல்முறையாக சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 12-ல், பொது விடுமுறை நாளான வெள்ளி கிழமை அன்று மாலை 5மணி முதல் 8மணி வரை ஏரியா சபை நடத்தப்பட்டது.

இதில் 10 ஆவது வார்டு கவுன்சிலர் கவி. கணேசன் தலைமையில் நடைபெற்ற ஏரியா சபை கூட்டத்தில் காலாடிபேட்டை, ராஜாக்கடை, தேரடி ஆகிய தெருக்களில் வசிக்கும் மக்கள் 150 பேர் கலந்து கொண்டனர். மேலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட துறையை சேர்ந்த அதிகாரிகளும் இந்த சபையில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை அகற்றுவது, சாலை, கழிவு நீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பிரச்சனை, மரக்கிளைகள் தெரு விளக்கின் வெளிச்சதை மறைத்துள்ளதனால் அவற்றை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோயிலை சுற்றி எல்டிஇ தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் தெரு நாய் தொல்லைகளை குறைக்க வேண்டும்.

டாஸ்மாக் தொல்லைகள் அதிகரித்துள்ளதால் மது பிரியர்கள் குடித்து விட்டு சாலையிலேயே தூங்குவது உள்ளிட்ட முக்கிய பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் இக்குறைகளை விரைவில் சரி செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர். மேலும் பொது மக்களின் பிரச்சனைக்கு ஏரியா சபைக் கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய ஏரியா சபைவை மற்ற வார்டிலும் நடத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 76 இடங்களில் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் - கே.எஸ். அழகிரி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.