ETV Bharat / state

கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காளை தாக்கிய இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 18, 2023, 1:24 PM IST

Etv Bharat
Etv Bharat

கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டியில் (Karur Thogamalai jallikattu 2023) படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Karur Thogamalai jallikattu 2023: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ராசாண்டர் திருமலை எனும் ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் (Karur Thogamalai jallikattu), காவல்காரன்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டி சேர்ந்த சிவகுமார்(21) என்ற மாடுபிடி வீரர் காளை மாடு முட்டியதில், வலது கண் பார்வை இழந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவரை அங்கிருந்த மருத்துவக்குழுவினர் மீட்டு முதலுதவி அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, திருச்சியில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று (ஜன.18) அதிகாலை சிவக்குமார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கரூர் தோகைமலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் கரூர் காவல்காரன்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜன.16 ஆம் தேதி நடந்த உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் (Madurai Palamedu Jallikattu) 9 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தில் இருந்த பாலமேடு கிராமத்தைச் சார்ந்த அரவிந்த் ராஜ்(24) என்னும் மாடுபிடி வீரர், வாடிவாசலிலிருந்து வெளியே வந்த காளையின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் (Trichy Suriyur Jallikattu) காளை மோதியதில் பார்வையாளரான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணகோனன்பட்டியைச் சேர்ந்த அரவிந்த்(25) என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே நேற்று (ஜன.17) வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு சென்று விட்டு திரும்பியபோது, அரசு பேருந்துடன் காளைகளை ஏற்றி சென்ற டாட்டா ஏசி வாகனம் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் (4 killed including 2 Vanniyanviduthi Jallikattu bulls) சம்பவ இடத்திலேயே டாட்டா ஏஸ் ஓட்டுநர் விக்கி(30) என்பவரும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மதியழகன் (25) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதையும் படிங்க: தொட்டுப்பார்! காளையர்களை கிறங்கடித்த காளைகள் - இது கரூர் ஜல்லிக்கட்டு சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.