ETV Bharat / state

தொட்டுப்பார்! காளையர்களை கிறங்கடித்த காளைகள் - இது கரூர் ஜல்லிக்கட்டு சம்பவம்!

author img

By

Published : Jan 17, 2023, 11:02 PM IST

கரூர் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் இன்று 61-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொட்டுப்பாரு! காளையர்களை கிறங்கடித்த காளைகள்-கரூர் ஜல்லிக்கட்டு...சீறிப்பாய்ந்த காளைகள்
தொட்டுப்பாரு! காளையர்களை கிறங்கடித்த காளைகள்-கரூர் ஜல்லிக்கட்டு...சீறிப்பாய்ந்த காளைகள்

தொட்டுப்பார்! காளையர்களை கிறங்கடித்த காளைகள் - இது கரூர் ஜல்லிக்கட்டு சம்பவம்!

கரூர்: தமிழ்நாட்டில் முழுவதும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளையொட்டி கடந்த 2 நாட்களாக, திருச்சி மாவட்டம் சூரியூர், மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

கரூர் மாவட்டத்தில், தோகைமலை அருகே உள்ள ராச்சாண்டார் திருமலையில் (ஆர்.டி.மலை) 61-ம் ஆண்டு ஜல்லிகட்டு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத் போட்டியை தொடங்கி வைத்தார். திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 756 மாடுகள் களம் இறக்கப்பட்டன. 367 மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்த கார்த்தி 21 காளைகளை பிடித்து முதல் பரிசு வென்றார். அவருக்கு ஜல்லிக்கட்டு காளை ஒன்றும், வாசிங் மெஷினும் பரிசாக வழங்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித் 7 காளைகளை பிடித்து 2-ம் பரிசு வென்றார். அவருக்கு சோபா பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான பரிசினை திருச்சி மாவட்டம், கீரிக்கல்மேடு செல்வத்தின் காளை பெற்றது. பரிசாக சைக்கிள், பீரோ ஆகியவையும் ஜல்லிக்கட்டு தன்னாட்சி ஆய்வுக்குழு சார்பில் ரூ.10,000மும் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை விழாக்குழுவினர் வழங்கினர்.

இதையடுத்து 12 மாட்டு உரிமையாளர்கள், 22 மாடு பிடி வீரர்கள், 16 பார்வையாளர்கள் காயமடைந்தனர். இவர்கள், திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காவல்காரன்பட்டி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த சிவகுமார் (21) மாடுபிடி வீரருக்கு காளை முட்டியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பறிபோனது.

கரூர் தோகமலை ஜல்லிக்கட்டு போட்டியை காண, கரூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த ஜல்லிக்கட்டு ரசிகர்கள் ஏராளமானோர் வந்து, உற்சாகமாக ஆரவாரங்கள் எழுப்பி ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க:Trichy Mukkombu pongal: திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் திரண்ட பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.