ETV Bharat / state

காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்: இருவர் கைது

author img

By

Published : Jul 10, 2020, 3:14 AM IST

லாரி பறிமுதல்
லாரி பறிமுதல்

கரூர்: காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மணல் எடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற தடையை மீறி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பலர் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து, அதை லாரிகளில் லோடு ஏற்றி திருட்டுத்தனமாக விற்பனைக்காக கடத்தி வருகின்றனர்.
இதைத் தடுக்க வலியுறுத்தி சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையில், கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோமூர், நெரூர், காவேரி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் எடுக்கப்பட்டு லாரியில் கடத்தப்பட்டுவருவதாக காவலர்களுக்க புகார்கள் கிடைக்கப்பெற்றன.

இதையடுத்து காவலர்கள், தண்ணீர்பந்தல் அருகே உள்ள வாங்கல் காவல் நிலைய சோதனைச்சாவடியில் அந்த லாரியை பிடித்து சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. உடனே லாரியையும் லாரியை ஓட்டி வந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: இளைஞரிடமிருந்து மகளை மீட்டுத் தரக்கோரி தாய் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.