ETV Bharat / state

ரூ.8 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட இரண்டு நவீன சுற்றுலாப்படகுகள் என்ன ஆனது?

author img

By

Published : Jul 15, 2022, 10:39 PM IST

8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட இரண்டு நவீன சுற்றுலாப் படகுகள் என்ன ஆனது
8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட இரண்டு நவீன சுற்றுலாப் படகுகள் என்ன ஆனது

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட இரண்டு நவீன சுற்றுலாப் படகுகள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது. அதுபற்றி விளக்குகிறது, இந்த செய்தித் தொகுப்பு...

குமரி: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் படகில் சென்று பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக வருவதாலும், படகில் பயணம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் நின்று, சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுவதைக்கருத்தில் கொண்டும், கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 நவீன சுற்றுலா படகுகள் வாங்கப்பட்டன. ஆனால், இந்த சுற்றுலாப் படகுகளை கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் பயன்படுத்தப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

'கடந்த ஆட்சி முதல் இந்த ஆட்சி வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலாப் படகுகள் பயன்படுத்தாமல் முடங்கி நிற்பதன் காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்' என கன்னியாகுமரி சுற்றுலா வழிகாட்டிகள் சங்க சட்ட ஆலோசனைக்குழு, தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.

இந்த இரண்டு சுற்றுலா படகுகளும் படகு துறையில் முடங்கி இருப்பதால், வழக்கமாக இயக்கப்படும் படகுகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்வதில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மிகப்பெரிய சிரமத்திற்கு சுற்றுலாப் பயணிகள் ஆளாகியுள்ளது வெளிப்படையாகத்தெரிகிறது. இக்குறைகளை நீக்க அரசு முன்வரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

ரூ.8 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட இரண்டு நவீன சுற்றுலாப்படகுகள் என்ன ஆனது?

இதையும் படிங்க: கடலுக்கு அடியில் எண்ணெய் நிறுவனத்தின் கட்டமைப்பை ஆய்வு செய்ய புதிய மென்பொருள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.