ETV Bharat / state

’காந்திக்கும் பாஜகவுக்கும் இருப்பது துப்பாக்கி தோட்டா உறவு’

author img

By

Published : Oct 3, 2019, 2:26 AM IST

the-relation-between-the-bjp-and-gandhi-it-is-bullet-relationship

குமரி: காந்திக்கும் பாஜகவுக்கும் உள்ள உறவு துப்பாக்கித் தோட்டா உறவு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் பேரணி சென்றபோது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தேசபிதா காந்தியடிகள், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் அகிம்சை, சத்தியம், சமத்துவம், சேவை, ஏழை மக்களுக்கு உதவுவது, எளிமையாக வாழ்வது உள்ளிட்ட தத்துவங்களை வலியுறுத்தி இந்தப் பேரணியை நடத்தியுள்ளோம். மகாத்மா காந்தி இந்தியாவிற்கான தலைவர் மட்டுமல்லை அவர் உலகத்திற்கான தலைவர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவின் தந்தை மோடி என கூறியிருக்கிறார். அவருக்கு இந்திய வரலாறோ, உலக வரலாறோ, ஏன் அமெரிக்க வரலாறு கூட அவருக்குத் தெரியாது.

கே.எஸ்.அழகிரி பேட்டி

இந்த விவகாரத்தில் மோடி அவர்கள் நான் தேசப்பிதா இல்லை, காந்தி தான் தேசப்பிதா எனக் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அவருக்கு பெருமை கிடைத்திருக்கும்.

பாரதீய ஜனதா கட்சி மகாத்மா காந்தியடிகளுக்கு செய்யும் நினைவுகள் அனைத்தும் பொய்யானவை. ஏனென்றால் காங்கிரஸுக்கும் காந்திக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு. ஆனால் காந்திக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இருக்கும் உறவு, துப்பாக்கி தோட்ட உறவு " என்றார்.

இதையும் படிங்க: 'ட்ரம்பிற்கு இந்திய நாட்டின் வரலாறு தெரியாததால் மோடியை புகழ்ந்துள்ளார்' - கே.எஸ்.அழகிரி

Intro:tn_knk_05_ksalakiri_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
மகாத்மா காந்தி இந்தியாவிற்கான தலைவர் மட்டுமில்லை உலகத்திற்கான தலைவர் .காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி.Body:tn_knk_05_ksalakiri_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
மகாத்மா காந்தி இந்தியாவிற்கான தலைவர் மட்டுமில்லை உலகத்திற்கான தலைவர் .காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி கன்னியாகுமரியில் காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நிறைவு விழா நினைவு பாதயாத்திரையின் போது பேட்டி

தேசபிதா மகாத்மா காந்தியடிகள், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில், அகிம்சை, சத்தியம், சமத்துவம், சேவை, நாணயமாக நடப்பது, ஏழைகளுக்காக எழுமையாக வாழ்வது உள்ளிட்ட தத்துவங்களை வலியுறுத்தி இந்த பாதயாத்திரையை நடத்தியுள்ளோம்.


மகாத்மா காந்தி இந்தியாவிற்கான தலைவர் மட்டுமில்லை உலகத்திற்கான தலைவர்,

அமெரிக்க அதிபர் டிரெம்ப் இந்தியாவின் தந்தை மோடி என கூறியிருக்கிறார். அவருக்கு இந்திய சரித்திரமும் தெரியாது, உலக சரித்திரமோ அல்லது அமெரிக்க சரித்திரமோ தெரியாது. இந்த விவகாரத்தில் மோடி அவர்கள் நான் தேசப்பிதா இல்லை காந்தி தான் தேசப்பிதா என கூறவில்லை, அவ்வாறு கூறியிருந்தால் அவருக்கு பெருமை கிடைத்திருக்கும். ஒரு குடும்பத்திற்கு ஒரு தந்தை தான் இருக்க வேண்டும், அது போல் ஒரு நாட்டிற்கு ஒரு தந்தை தான் இருக்க முடியும்,இதனை மனதில் வைத்து ஆர்.எஸ்.எஸ்., , பாரதீய ஜனதா கட்சியினர் செயல்பட வேண்டும்.

வங்காளத்தில் இருக்க கூடிய மக்களின் கணக்கெடுப்பை எடுத்து வருகிறோம், வெளியில் இருந்து வந்தவர்கள் துரத்தப்படுவார்கள் என்று அமித்ஷா கூறுகிறார். ஆனால் 70 ஆண்டுகள் ஒரு தேசத்தில் வாழ்ந்த பிறகு அவர்களது தேசத்தை பார்க்க வேண்டுமா? இப்படி துரத்துவோம் என்று கூறுவது ஒரு சர்வாதிகாரம், இது தவறு., நம்மிடம் வருபவர்களை நாம் வரவேற்பது தான் நமது கலாச்சாரம்.

பாரதீய ஜனதா கட்சி மகாத்மா காந்தியடிகளுக்கு செய்யும் நினைவுகள் அனைத்தும் பொய்யானவை, ஏனென்றால் காங்கரசுக்கும் காந்திக்கும் இருப்பது தொப்பிள் கொடி உறவு. காந்திக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இருப்பது துப்பாக்கி உறவு.

காங்கிரஸ் கட்சி சுதந்தரத்திற்கு பின் கலைக்க வேண்டிய கட்சி என்று காந்தியடிகள் கூறியதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது, காந்தியடிகள் பற்றி முழுவதும் தெரியாத காரணத்தால், அவர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பிறகு பேச வேண்டும். என பேட்டியளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.