ETV Bharat / state

தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

author img

By

Published : Feb 21, 2022, 9:09 PM IST

வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் வெற்றியைக் கொண்டாட அனுமதி இல்லை எனக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 21) நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி இன்றைய தினம் பத்திரிகையாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, மாங்காடு நகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி என மொத்தம் 155 வார்டுககளில் பதிவான வாக்குகள் இரண்டு மையங்களில் எண்ணப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம் ஆர்த்தி

அதையொட்டி 600 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுவதும் கண்காணிக்கப்படும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 35 வாக்கு எண்ணும் மேசைகளில் அமைக்கப்பட்டு எண்ணப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 16 சுற்றுகள் வரை எண்ணப்படும், மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளில் பதிவான வாக்குகள் ஆறு மேசைகளில் 9 சுற்றும், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் மூன்று மேசைகளில் 9 சுற்றும், வாலாஜாபாத் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் மூன்று மேசைகளில் 6 சுற்றிலும் எண்ணப்படும்.

அதற்கென 70 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். ஆறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து 18 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அஞ்சல் வாக்குகள் 8 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

நகராட்சி, பேரூராட்சிகளில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவானவை எண்ணப்படும்.

பூத் முகவர்களுக்குத் தேர்தல் அலுவலர் வழங்கிய ஐடி கார்டு, ஆதார்/வாக்காளர் அட்டை, தடுப்பூசிச் சான்றிதழ் / கரோனா தொற்று இல்லை என்னும் சான்றிதழ் அவசியம், செல்போன், கேமரா எடுத்தவர அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாட அனுமதி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் அறிவிப்புகள் என்ன?

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.