ETV Bharat / state

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

author img

By

Published : May 19, 2020, 1:15 PM IST

fire accident at kanyakumari
coir mill fire

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகின.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இலந்தையடிதட்டு பகுதியைச் சேர்ந்த மயூர்குமார் ராமசந்திரன் என்பவருக்குச் சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை மற்றும் தும்பு ஆலை இயங்கி வருகிறது.

இங்கு தென்னை நார் கொண்டு கட்டைகள் அமைத்து ஏற்றுமதி செய்யும் பணி நடைபெறும். இதற்கு மூலப்பொருட்களான தேங்காய் மட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று (மே-18) குமரி மாவட்டத்தில், பரவலாக இடியுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்து வந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மின்னல் தாக்கியதில் தொழிற்சாலையின் உள்பகுதியில் பலத்த சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்கள், இயந்திரப் பொருட்கள் எரிந்து நாசமாகின. இத்தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இவ்விபத்து குறித்து ஈத்தாமொழி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லாரிக்கு அடியிலமர்ந்து பயணித்த தந்தை - குழந்தையைக் காணச் சென்ற போது நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.