ETV Bharat / state

காதலியின் மார்பில் பச்சை குத்த சொல்லி நச்சரித்த காதலன் கைது

author img

By

Published : Aug 3, 2022, 11:54 AM IST

Etv Bharatகாதலியின் மார்பில் பச்சை குத்த சொல்லி நச்சரித்த காதலன் கைது
Etv Bharatகாதலியின் மார்பில் பச்சை குத்த சொல்லி நச்சரித்த காதலன் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலியிடம் தன் பெயரை மார்பில் பச்சை குத்த கட்டாயப்படுத்தியதாக காவல்நிலையத்தில் காதலி அளித்த புகாரின் பேரில் காதலனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர், கருங்கல் அருகே உள்ளார் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளி படித்துக் கொண்டிருந்த போது தோழி ஒருவருடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த தோழி மூலம் மார்த்தாண்டம் பயணம் பகுதியை சார்ந்த 25 வயது அபினேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அபினேஷ் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பழகி வந்துள்ளனர் . அபினேஷ் உடன் மாணவி செல்போனில் பேசி வந்துள்ளார். பின்னர் திடீரென அபினேஷ் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார் .தொடர்ந்து செல்போனில் பேசி மாணவிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததை தொடர்ந்து மாணவியும் ஒரு கட்டத்தில் அபினேஷ் கொடுத்த தொந்தரவு தாங்க முடியாமல் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பாத அபினேஷ் தனது பெயரை உடலில் பச்சை குத்த வேண்டும் அப்போது தான் நீ உண்மையாக காதலிக்கிறாய் என நம்புவேன் எனவும், பச்சை குத்த மறுத்தால் செல்போனில் நாம் பேசிய பதிவு மற்றும் செல்பி போட்டோக்களை பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். ஆனால் மாணவி அபினேஷின் பெயரை பச்சை குத்த மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ் மாணவியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். பின்னர் மாணவியை தொடர்பு கொண்டு உன்னை இனிமேல் வாழ விடமாட்டேன் என மிரட்டியும் உள்ளார். பின்பு மாணவி வீட்டில் முன்பு நின்று தகராறும் செய்துள்ளார். தொல்லை தாங்க முடியாத மாணவி, இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி அபினேஷை கைது செய்தனர்.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு - மூன்று பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.