ETV Bharat / state

குமரியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக படகு தளம் அமைக்க முடிவு

author img

By

Published : Jan 7, 2020, 11:26 PM IST

குமரி: ரூ.2 கோடி செலவில் 90 மீட்டர் நீளத்தில், பூம்புகார் வளாகத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் கூடுதலாக ஒரு படகு நிறுத்தும் தளம் அமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

குமரியில் படகு நிறுத்தும் தளம்  boombukar boat department constract new Boat parking lot in kannyakumari  பூம்புகார் படகு போக்குவரத்துக் கழகம்
குமரியில் புதிய படகுதளம்

கன்னியாகுமரி கடலின் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் 133அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளன. கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள், நேரில் பார்த்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகு சேவை வழங்கப்பட்டுவருகிறது.

இதற்கென எம்.எல். குகன், எம்.எல். பொதிகை, எம்.எல். விவேகானந்தா ஆகிய படகுகள் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன. இதற்கென பூம்புகார் வளாகத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் படகு நிறுத்தும் தளம் உள்ளது. இங்கு கூடுதலாக ஒரு படகுதளம் அமைக்க வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவந்தது.

குமரியில் புதிய படகுதளம்

இந்நிலையில், ரூ.2 கோடி செலவில் 90 மீட்டர் நீளத்தில் கூடுதல் படகு நிறுத்தும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். படகு தளம் அமைப்பதற்கான சிமெண்ட் பிளாக்குகள் கன்னியாகுமரியை அடுத்துள்ள மாதவபுரத்தில் தற்போது தயாராகிவருகின்றன.

இதையும் படிங்க: தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு!

Intro:கன்னியாகுமரி பூம்புகாா் சுற்றுலா படகு போக்குவரத்து படகுதளத்தில் ரூ. 2 கோடி செலவில் படகு தளம் அமைக்கும் பணிகள் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.Body:tn_knk_01_new_boatjetey_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி பூம்புகாா் சுற்றுலா படகு போக்குவரத்து படகுதளத்தில் ரூ. 2 கோடி செலவில் படகு தளம் அமைக்கும் பணிகள் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி கடலில் நடுவே சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையும் அமைந்துள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை நேரில் பாா்த்துச் செல்லும் வகையில் தமிழக அரசின் சார்பில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவையை இயக்கி வருகிறது.இதற்கென எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை, எம்.எல்.விவேகானந்தா ஆகிய படகுகள் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன. இதற்காக பூம்புகார் வளாகத்திலுள்ள கடற்கரையில் படகு நிறுத்தும் தளம் உள்ளது. இங்கு கூடுதலாக மேலும் ஒரு படகுதளம் அமைக்க வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரூ. 2 கோடி செலவில் 90 மீட்டா் நீளத்தில் கூடுதல் படகு நிறுத்தும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். படகு தளம் அமைப்பதற்கான சிமெண்ட் பிளாக்குகள் கன்னியாகுமரியை அடுத்த மாதவபுரத்தில் தயாராகி வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.