ETV Bharat / state

உணவு பாதுகாப்புத்துறை பறிமுதல் செய்த 3 டன் வெல்லம்.!

author img

By

Published : Dec 7, 2019, 1:29 PM IST

Food Security Officers Raid in Sugar Factory
Food Security Officers Raid in Sugar Factory

ஈரோடு: சித்தோடு வெல்லமண்டியில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் நிறம் குறைவாக தயாரிக்கப்பட்ட 2900 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லமண்டியில் நிறம் குறைவாக தரமற்ற முறையில் வெல்லம் வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் கலைவாணி தலைமையில் சித்தோடு வெல்லமண்டியில் சோதனை நடத்தபட்டது. இதில் நிறம் குறைவாக இருந்த வெல்ல மாதிரிகளை சோதனையிட்டபோது வெல்லத்தில் கலப்படம் செய்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 3 டன் வெல்லத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மூன்று டன் வெல்லம் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை

மேலும் பலமுறை இங்கு சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் கலப்படம் செய்தவர்கள் மீது நீதிமன்றம் மூலம் வழக்கு போடப்படும் என்றும் அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

வெல்லம் வெளிர் நிறமாக வருவதற்கு சர்க்கரை, மைதா போன்ற பொருட்களையும் ரசாயனங்களையும் கலப்பதாக தெரிவித்த அலுவலர்கள், இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கிடையே தகராறு - துப்பாக்கியால் மிரட்டியவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Intro:ஈரோடு ஆனந்த்
டிச07

வெல்லமண்டியில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை - 2900 கிலோ வெல்லம் பறிமுதல்!

ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லமண்டியில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் நிறம் குறைவாக தயாரிக்கப்பட்ட
2900 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லமண்டியில் நிறம் குறைவாக தரமற்ற முறையில் வெல்லம் வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் வெல்லமண்டியில் சோதனை நடத்தினர்.

இதில் நிறம் குறைவாக இருந்த வெல்லம் மாதிரிகளை சோதனையிட்ட அதிகாரிகள் அதனடிப்படையில் 2900 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

Body:மேலும் பலமுறை இங்கு சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் கலப்படம் செய்தவர்கள் மீது நீதிமன்றம் மூலம் வழக்கு போடப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Conclusion:வெல்லம் வெளிர் நிறமாக வருவதற்கு சர்க்கரை, மைதா போன்ற பொருட்களையும் ரசாயனங்களையும் கலப்பதாக தெரிவித்த அதிகாரிகள் இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.