ETV Bharat / state

கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலி.. திண்டுக்கல்லில் நிகழ்ந்த சோகம்!

author img

By

Published : Aug 20, 2023, 2:15 PM IST

கணவரை காப்பாற்ற சென்ற மனைவி மின்சாரம் தாக்கி பலி
கணவரை காப்பாற்ற சென்ற மனைவி மின்சாரம் தாக்கி பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டின் சுவர்களுக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த பொழுது, மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்ற சென்ற மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல்: மீனாட்சிபுரம் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டின் சுவர்களுக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கணவர் அலறிய நிலையில், அவரைக் காப்பாற்ற சென்ற மனைவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (37). இவர் டிரைவராக வேலை செய்கிறார்.

இவரது மனைவி உதயசூரியா (30). இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உள்ளனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள மீனாட்சிபுரம் என்ற பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் சிமெண்ட் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டிட சுவர்களுக்கு, நேற்று (ஆகஸ்ட். 19) இரவு தண்ணீர் அடிப்பதற்காக பாண்டி மற்றும் அவரது மனைவி உதயசூரியா ஆகிய இருவரும் சென்று உள்ளனர். அப்போது உதயசூரியா வீட்டின் கீழே இருந்துள்ளார். வீட்டின் மேலே ஏறி பாண்டி கட்டிடங்களுக்கு தண்ணீர் அடித்துள்ளார். வீட்டின் மேற்கூரை அருகே தற்காலிகமாக மின்சார விளக்கு அமைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ADMK Ezuchi Manadu : 51 அடி உயர கம்பத்தில் பறக்கும் அதிமுக கொடி! ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு!

அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மின் வயர்களில் இருந்து மின்சாரம் பாய்ந்து பாண்டி அலறி உள்ளார். கணவனின் அலறல் சத்தத்தைக் கேட்ட உதயசூரியா கணவனைக் காப்பாற்றுவதற்காக முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் உதயசூரியா மீதும் பாய்ந்தது. அதையடுத்து மின்சாரம் தாக்கப்பட்ட உதயசூரியா வீட்டின் மேலே இருந்து தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்து உள்ளார்.

சத்தம் கேட்டு வந்த சுற்றுப் பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக உதயசூரியாவை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட உதயசூரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், பாண்டி பலத்த காயத்துடன் திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை காப்பாற்ற சென்ற மனைவி உயிரிழந்தது, அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Nanguneri issue: அரசியல்வாதிகள் சாதியை விட்டு வெளியேற வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சருக்கு பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.