ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது ஆம்னி வேன் மோதி விபத்து - மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Apr 22, 2021, 7:51 AM IST

mni-van-collides-with-two-wheeler-in-palani
mni-van-collides-with-two-wheeler-in-palani

திண்டுக்கல் : பழனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

பழனி அருகே கொக்கரக்கோ வலசு பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சதீஷ், ரமேஷ், லோகேஷ் ஆகிய மூன்று பேரும் கீரனூர் அரசு பள்ளியில் செய்முறை தேர்வை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கீரனூர் ஆற்றுப்பாலம் அருகே மூவரும் வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி வேன் மோதியது.

இந்த விபத்தில் சதீஷ் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், லோகேஷ் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றுமொரு மாணவன் ரமேஷ் முகத்தில் காயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கீரனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.