என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை.! திமுக எம்பி-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்

author img

By

Published : Jan 21, 2023, 11:44 AM IST

திமுக எம்பி வேலுச்சாமி

சாணார்பட்டியில் புளி பதப்படுத்தும் குடோனின் பூமி பூஜை விழாவில் கலந்துக்கொண்ட திமுக எம்பி வேலுச்சாமி, இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டதில், "புளி"-க்கு பதிலாக "புலி" என்றும் "ஏசி" குடோன் என்பதற்கு பதிலாக "இயேசு" குடோன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

திண்டுக்கல்: நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.85 லட்சம் மதிப்பில் புளி தட்டுதல், தரம் பிரித்தல், மற்றும் பேக்கேஜ் செய்தல் உள்ளிட்ட பணிக்கான புதிய (குடோன்) கட்டிட பூமி பூஜை விழா நேற்று (ஜன 20) நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட திமுக எம்பி வேலுச்சாமி கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார். மேலும் இவ்விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், வடக்கு மாவட்ட கவுன்சிலர் லலிதா மோகன், சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத் தலைவர் ராமதாஸ் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில், விழா குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்பி வேலுச்சாமி, "புளி"-க்கு பதிலாக "புலி" என்றும் "ஏசி" குடோன் என்பதற்கு பதிலாக "இயேசு" குடோன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

திமுக எம்பி வேலுசாமி ஃபேஸ்புக் பதிவு
திமுக எம்பி வேலுசாமி ஃபேஸ்புக் பதிவு

இதனை பார்த்த நெட்டிசன்கள், “தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுகவில் இருந்து கொண்டு நல்லா தமிழ் வளர்க்கிறீங்கப்பா, என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை, காட்டுப்புலி அல்ல வீட்டு புளி” என மீம்ஸ் போட்டு, திமுக எம்பி வேலுச்சாமியை கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது எம்.பி.யின் முகநூல் பக்கத்தில் எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

திமுக எம்பி-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்
திமுக எம்பி-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்
திமுக எம்பி-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்
திமுக எம்பி-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.