ETV Bharat / state

Palani murugan temple: குடமுழுக்கு விழாவில் பங்கேற்க குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு!

author img

By

Published : Jan 12, 2023, 7:55 AM IST

Etv Bharatபழனி குடமுழுக்கு விழாவில் பங்கேற்க குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு
Etv Bharatபழனி குடமுழுக்கு விழாவில் பங்கேற்க குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு

பழனி கோவில் குடமுழுக்கு விழாவை காண இணைய தளத்தில் பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் ஜனவரி 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் நேற்று (ஜன.11)நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விசாகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தின் போது ஜனவரி 27ஆம் தேதி காலை 8 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை குடமுழுக்கு நடைபெறும் எனவும், குடமுழுக்கைக் காண மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் காலை ௪ மணி முதல் 8 மணிக்குள் மலைக் கோயிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2000 பேரும் படிவழிப்பாதை வழியாக ௪ ஆயிரம் பேர் என மொத்தம் ௬ ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடமுழுக்கைக் காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடு: குடமுழுக்கை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் பேருந்துகள் பழனி - தாராபுரம் சாலையில் உள்ள மால்குடி மருத்துவமனை அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து சிறப்புப் பேருந்துகள் மூலம் பழனி நகருக்குள் வந்து மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பழனி நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த நான்கு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு 1500 வாகனங்கள் வரை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றங்களைக் குறைப்பதற்காக நகர் முழுவதும் 266 கண்காணிப்பு கேமராக்களும், வைஃபை வசதியுடன் கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்ட எல்.இ.டி திரை பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு நடைபெறும் மூன்று நாட்களுக்குப் பழனி மலை கோயிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதானத் திட்டம் பழனி அடிவாரம் பகுதியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பழனி கோயில் இணையான நடராஜன், பணித்துறை மின்சார துறை போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பொங்கலுக்கு கூடுதலாக 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.