ETV Bharat / state

Christmas special : திண்டுக்கல்லில் களைகட்டும் கேக் விற்பனை

author img

By

Published : Dec 24, 2021, 9:11 PM IST

கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு
கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு

Christmas special : திண்டுக்கல் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பல வகையான கேக் வகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அப்போது, கிறிஸ்தவர்கள், ஏசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் வகையில் வீடுகள், தேவாலயங்களில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வர்.

தற்போது விழாவைக் கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான கேக் வகைகள் தயாரிக்கும் பணிகளில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 500-க்கும் மேற்பட்ட பேக்கரிக் கடைகள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கேக் வகைகள் பல வண்ணங்களில் தயாராகி வருகின்றன.

பிளம்கேக், வெண்ணிலா, வால்நட், ரிச் பிளம், பனானா கேக், நெய் கேக், பட்டர் புட்டி, சாக்லெட் கேக், கிறிஸ்துமஸ் குக்கீஸ் போன்ற வகைகள் அதிகமாகத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் கேக் விற்பனையும் உற்பத்தியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு

இது குறித்து திண்டுக்கல் நத்தம் சாலையிலுள்ள பேக்கரி கடை உரிமையாளர் ரூபன் கூறுகையில், “கிறிஸ்துமஸ் கேக் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் மந்தமாக இருந்தது.

தற்போது சூழ்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விற்பனை அதிகரித்து வருகிறது.

எங்கள் கடையில் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கேக்குகள் வித விதமான ரகங்களில் தயாரிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர் அதிகளவு வருவதால் நாங்கள் மகிழ்ச்சியாகவுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: Christmas special recipe:'ரோஸ் குக்கீஸ்' தயாரிக்கும் முறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.