ETV Bharat / state

Palani: பழனி கோயிலுக்கு போறீங்களா.. புது விதிமுறைகள படிச்சுட்டு போங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 11:16 AM IST

palani
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்குள் செல்போன் கேமரா கொண்டு செல்ல தடை

Palani dhandayuthapaniswamy Temple: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் மொபைல் போன்கள் மற்றும் கேமரா பொருத்திய கருவிகள் கொண்டு செல்ல தடை விதித்து உள்ள இந்து சமய அறநிலையத்துறை, அது தொடர்பான அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணிசுவாமி கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் இணை ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், "2022ம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குள் மொபைல் போன்கள் மற்றும் கேமரா பொருத்திய கருவிகள் கொண்டுவர தடை விதிக்கபட்டது. அந்த தடை வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தபடும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பழனி கோயிலின் மலை அடிவாரத்தில், மொபைல் போன்கள் சேகரிப்பு மையங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், மொபைல் போன்களை பாதுகாப்பதற்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யபட்டு உள்ளதாகவும், தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மொபைல் போன்கள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஞ்ச், ரோப் கார் மையங்கள், மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயில் அருகே என 3 இடங்களில் மொபைல் போன்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கபட உள்ளதாகவும், மலைக்கோயில் அருகே அமைந்துள்ள தண்ணீர் பந்தல் மண்டபம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தவுடன், அது மீட்டெடுக்கப்பட்டால், அந்த மண்டபத்தின் ஒரு பகுதியை மொபைல் போன்கள் சேகரிப்பு மையமாக மாற்றி பயன்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கோயிலுக்குள் மொபைல் போன்கள் கொண்டு செல்லக்கூடாது என இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பக்தர்கள் தங்கும் இடங்களில் விளம்பரம் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மேலும், பக்தர்களும் பரிசோதிக்கபடுவார்கள் என்றும், இதையும் மீறி பக்தர்கள் எவரேனும் கேமரா போன்ற பொருட்களைக்கொண்டு புகைப்படம் எடுத்தால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த நடைமுறைகளை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறித்தி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:லஞ்ச பணத்தில் வீடுகள் வாங்கி குவித்த பெண் சார் பதிவாளர்.. சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.