ETV Bharat / state

ஒகேனக்கல் விஐபி வழி - மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை!

author img

By

Published : Nov 28, 2019, 8:23 PM IST

hoganakkal
hoganakkal

தருமபுரி: ஒகேனக்கலில் உள்ள விஐபி வழியைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ஒகேனக்கல். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து அதிகளவில் ஏ சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்குச் சுற்றுலா வருவது வழக்கம்.

ஒகேனக்கல் மெயின் அருவிக்குச் செல்லும் வழியில், உள்ள பிரதான வழி தற்போது இரும்பு கதவுகளால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த வழியைப் பயன்படுத்த முடியாமல் மாற்று வழியில் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த பிரதான வழி அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தார், போன்ற விவிஐபிகள் வந்தால் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுற்றித் செல்லக்கூடிய பகுதிகளில் அதிகளவு மீன்சமைக்கும் கடைகள் இருப்பதால் அங்கு சமைக்கப்படும் எண்ணெய், உணவுகள் அவ்வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் மேல் விழுகிறது. ஆனாலும் சுற்றுலாப் பயணிகள் வேறு வழியின்றி இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒகேனக்கல் விஐபி வழியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

இப்பகுதியில் உள்ள பிரதான வழியின் கதவு பூட்டப்பட்டு அதன் சாவி ஆளும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து கவனம் செலுத்தி விஐபி வழியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு நிலத்தை தரக்கோரி மக்கள் போராட்டம்...

Intro:தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் விஐபி கதவு . சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு. அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களுக்கு மட்டும் அனுமதி.Body:தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் விஐபி கதவு . சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு. அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களுக்கு மட்டும் அனுமதி.Conclusion:தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் விஐபி கதவு . சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு. அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களுக்கு மட்டும் அனுமதி. தருமபுரி மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் ஒகேனக்கல்.தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவது வழக்கம். ஒகேனக்கல் பகுதியின் சிறப்பு. ஒகேனக்கல் மெயின் அருவி .சினிபால்ஸ். எண்ணெய் குளியல். ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் பிரதான வழி ஒன்று உள்ளது. இந்த வழி இரும்பு கதவுகளால் பூட்டப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் இந்த வழியைப் பயன்படுத்த முடியாமல் மாற்று வழியில் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பிரதான வழியில் அரசியல்வாதிகளின் உறவினர்கள். அரசு அலுவலர்களுக்கும். அரசு அலுவலர்களின் குடும்பத்தாருக்கும். விவிஐபி களுக்கு மட்டுமே திறந்துவிடப்படுகிறது.சாதாரண பொதுமக்கள் வழியே செல்ல அனுமதி இல்லை அவர்கள் சுற்றித் தான் செல்ல வேண்டும் அவ்வாறு செல்லக்கூடிய பகுதிகளில் அதிக அளவு மீன்சமைக்கும் கடைகள் இருப்பதால் கடைகளில் சமைக்கப்படும் எண்ணெய் உணவுகள் அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளின் மேல் விழுகிறது. பல சிரமங்களில் சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பிரதான வழியின் கதவு பூட்டு சாவி ஆளும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நபர் தங்களுக்கு தேவையான சிலருக்கு மட்டும் வழியைத் திறந்து விட்டு விட்டுட்டு மீண்டும் பூட்டி அடைத்து கொள்கிறார்.மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி விஐபி கதவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்பது இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.