ETV Bharat / state

2 மாதங்களாக விவசாயப் பயிர்களை அழித்து வந்த காட்டுயானை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!

author img

By

Published : Feb 5, 2023, 6:18 PM IST

விவசாய பயிர்களை அழித்து வந்த காட்டுயானை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
விவசாய பயிர்களை அழித்து வந்த காட்டுயானை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

தருமபுரி அருகே கடந்த இரு மாதங்களாக கிராமப் புறங்களில் நுழைந்து விவசாயப் பயிர்களை அழித்து வந்த, காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

விவசாயப் பயிர்களை அழித்து வந்த காட்டுயானை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

தருமபுரி: கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது.

கடந்த சில மாதங்களாக பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, இண்டூர், பாலக்கோடு, சோமனஹள்ளி உள்ளிட்டப் பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த யானைக் கூட்டம் வனப்பகுதியை விட்டு கிராமப்புறங்களுக்குள் நுழைந்து விவசாய நிலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. 2 மாதங்களாக இரண்டு யானை பிரிந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது.

இந்நிலையில் மாவட்ட வனத்துறை மூலம் ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டைத் தடுப்பு வன காவலர்களைக் கொண்டு வனப் பகுதிக்குள் விரட்டி அடிப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால், அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லவில்லை. தொடர்ந்து விவசாய பயிர்களைச் சேதப்படுத்திக் கொண்டே வந்தது.

இந்த யானைகளை விரட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி விவசாயிகளும், அரசியல் கட்சி அமைப்புகளும் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர். தொடர்ந்து வனத்துறையினரிடம் சிக்காமல், விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும் போக்கு காட்டி வரும் யானையை, விரட்ட கோயம்புத்தூர் ஆனைமலை வனப்பகுதியில் இருந்து சின்னதம்பி என்கின்ற கும்கி யானை, தருமபுரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக யானை நடமாட்டத்தினை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து இன்று பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினரும், வேட்டைத் தடுப்பு காவலர்களும் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தினர்.

இதில் ஒரு யானை வனப்பகுதிக்குச் சென்றது. மக்னா யானையினை மட்டும் வனத்துறையினர் பிடித்தனர். பிடிப்பட்டுள்ள மக்னா யானையை ஆனைமலை முகாமிற்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த நான்கு, ஐந்து மாத காலங்களாக விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்து, சேதம் செய்து வந்த ஒரு யானையைப் பிடித்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு யானை வனப்பகுதிக்குள் சென்றுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மீண்டும் கிராமங்களுக்குள் நுழையும் என்றும்; எனவே அதனையும் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Thaipusam Festival: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகல கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.