ETV Bharat / state

காணும் பொங்கல் - திருவிழாவான ஒகேனக்கல்

author img

By

Published : Jan 18, 2020, 8:34 AM IST

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

தர்மபுரி: காணும் பொங்கலைக் கொண்டாடுவதற்காக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுமார் 30 ஆயிரம் மக்களின் வருகையால் திருவிழா போல் அப்பகுதி காட்சியளித்தது.

தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அமைந்துள்ளது. இங்கு மெயின் அருவி, பரிசல் பயணம், எண்ணெய் மசாஜ் போன்ற சிறப்பு அம்சங்களும் உள்ளன.

30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான நேற்று காணும் பொங்கல் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். நேற்று மட்டும் சுமார் 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் திருவிழா கூட்டத்தைப் போல் அப்பகுதி நிரம்பி வழிந்தது. மக்களும் ஆர்வமாக பரிசல் சவாரி, எண்ணெய் மசாஜ், அருவியில் குளிப்பது என மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலைக் கொண்டாடினர்.

இதையும் படிங்க: காணும் பொங்கல் - களைகட்டிய மெரினா!

Intro:காணும் பொங்கல் கொண்டாட ஒகேனக்கல்லில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். Body:காணும் பொங்கல் கொண்டாட ஒகேனக்கல்லில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். Conclusion:காணும் பொங்கல் கொண்டாட ஒகேனக்கல்லில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர் . தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கலின் சிறப்பு மெயின் அருவி. பரிசல் பயணம். எண்ணெய்மசாஜ் போன்றவை சிறப்பு. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனா். சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டும் ஒகேனக்கல் மெயினருவி மற்றும் காவிரி ஆற்றின் கரை பகுதியில் குழித்து மகிழ்ச்சி அடைந்தனா். பெண்கள் காவிரி கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனர் .பலா் பரிசல் பயணம் செய்து ஒகேனக்கல் ஐந்தருவி . சினி அருவி .மெயின் அருவி அழகை பார்த்து ரசித்தனர் .
ஒகேனக்கல் சிறப்பு மீன் உணவுவை சுற்றுலா பயணிகள் சுவைத்து மகிழ்ச்சி அடைந்தனர் . பொங்கல் விடுமுறை மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்காக 30 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதியில் இருந்தும் ஏராளமானோர் ஒகேனக்கல் சுற்றுலா வந்திருந்தனர் . இதனால் ஒகேனக்கல் முழுவதும் இன்று சுற்றுலா பயணிகளால் களைகட்டியது.

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.