ETV Bharat / state

நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை கடும் வீழ்ச்சி

author img

By

Published : Jul 20, 2021, 2:15 PM IST

goat-sales-fall-sharply-at-nallampalli-goat-market
நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை கடும் வீழ்ச்சி

தர்மபுரி நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தர்மபுரி: நல்லம்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர். எடப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஏராளமானோர் ஆடு வாங்க வருவார்கள் என நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சிறிய ஆடு 3 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய்வரை விலை நிர்ணயம் செய்தனர்.

Goat sales fall sharply at Nallampalli goat market
நல்லம்பள்ளி ஆட்டுச்சந்தை

ஆனால், எதிர்பார்த்த அளவு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக பக்ரீத் பண்டிகைக்கு முன்வரும் சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறும்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சந்தையில், ஆடுகள் விற்பனையாகாததால், விவசாயிகள் சோகத்தோடு வீடு திரும்பினர். வெளி மாவட்டத்தில் இருந்து ஆடுவிற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த வாகன வாடகை கூட கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தொடங்கியாச்சு எட்டயபுரம் ஆட்டுச்சந்தை: குவிந்த வியாபாரிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.