ETV Bharat / state

தருமபுரி நகராட்சி குடியிருப்பிற்கு ஏசி வயரிங் செலவு ரூ.9 லட்சம் - அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 25, 2023, 5:59 PM IST

தருமபுரி நகராட்சி குடியிருப்பிற்கு ஏசி வயரிங் செலவு 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு கூறியதையடுத்து, தருமபுரி நகராட்சியின் நகர் மன்றக் கூட்டத்தில் இருந்து 13 அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

தருமபுரி: இன்று (ஜூலை 25) தருமபுரி நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா நகர் மன்றக் கூட்ட அரங்கில் நகர மன்றத்தலைவர் லெட்சுமி, நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்களின் வார்டுகளும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள சாலையில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் நகர அமைப்பு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகர் மன்ற உறுப்பினர் முன்னா குற்றம்சாட்டினார்.

தருமபுரி நகராட்சியின் 31வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாதேஷ் பேசும் போது, "நகராட்சி ஆணையாளர் தங்கி இருக்கும் நகராட்சிக்குச் சொந்தமான குடியிருப்பிற்கு புதிய ஏசி மற்றும் வயரிங் பணி குடியிருப்புக்கு வண்ணம் பூச 9 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதனை செயல்படுத்த நகர் மன்றத்தின் அனுமதிக்காக கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

புதியதாக வீடு கட்டினாலே ஒன்பது லட்சம் ரூபாய் தான் செலவாகும். ஆனால் ஏசி மற்றும் பழுது பார்க்க 9 லட்சம் ரூபாய் மன்ற அனுமதிக்காக கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நகராட்சிப் பகுதியில் நாய் பிடிக்க நிதி ஒதுக்கி நிதியை எடுத்துக்கொண்டனர். ஆனால், எந்தப் பகுதியிலும் நாய் பிடிக்கவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதில் அளித்த நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன், "தோராய மதிப்பு தான் ஒன்பது லட்சம்" என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சார்ந்த 13 நகர் மன்ற உறுப்பினர்களும் தாங்கள் வெளிநடப்பு செய்வதாகக் கூறி நகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓய்வுக்காக வெளிநாடு பறந்த நடிகர் விஜய் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.