ETV Bharat / entertainment

ஓய்வுக்காக வெளிநாடு பறந்த நடிகர் விஜய் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

author img

By

Published : Jul 25, 2023, 2:22 PM IST

லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

வெளிநாடு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய்
வெளிநாடு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய்

சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் தற்போது பான் இந்தியா அளவில் ரசிக்கப்படுகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டது. ஆனாலும், மற்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழில் சுமாராக போனாலும் மற்ற மொழிகளில் ரசிக்கப்பட்டது.

நடிகர் விஜய்யின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளதால் இவரை வைத்து படம் இயக்க தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் லியோ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்து உள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய் ரசிகர்கள் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு விழாவில் லியோ படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜிடம் விஜய் ரசிகர்கள் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என கேட்டனர்.

அப்போது இது கைதி மாதிரியான படம் என்று லோகேஷ் பதிலளித்தார். இவர் இயக்கிய கைதி படத்தில் பாடல்கள் ஏதும் இடம் பெறவில்லை. எனவே, லியோ படத்தில் நிறைய பாடல்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகும் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்வது வழக்கம்.

அதேபோல் சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில், சென்னையில் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த நடிகர் விஜய் தற்போது ஓய்வு எடுப்பதற்காக துபாய் சென்று உள்ளார்.

அதேபோல் அடுத்ததாக லண்டன் செல்ல உள்ளார் எனவும் கூறப்படுகிறது. துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய்யின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: "dealer of death"... ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.