ETV Bharat / state

அமெரிக்காவில் CGIAR-ன் நிகழ்ச்சி..முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கையெழுத்து

author img

By

Published : Nov 5, 2022, 5:08 PM IST

Etv Bharat
Etv Bharat

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கான்சாஸ் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கோவை: அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்ற சர்வதேச அளவிலான 'உலக உணவு விருது' வழங்கும் விழாவில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிலையில், கான்சாஸ் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக அங்கு நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், கையெழுத்திட்டுள்ளது.

'உலக உணவு விருது' வழங்கும் நிகழ்ச்சி: இவை தவிர தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மேலும், சர்வதேச முன்னோடி பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து வேளாண் பல்கலைக்கழகம் இன்று (நவ.5) வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் உள்ள அயோவா மாகாணத்தில் 'உலக உணவு விருது' வழங்கும் அமைப்பானது, கடந்த அக்.19, 20 ஆகிய தேதிகளில் நடத்திய விருது வழங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமியை கௌரவ விருந்தினராக வரவேற்றனர். மேலும், இவ்விழாவில் துணைவேந்தர் நார்மன் போர்லாக், பன்னாட்டு கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார்.

முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கையெழுத்து
முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கையெழுத்து

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்: இந்த வெளிநாட்டு பயணத்தின்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனை அமைப்பு (Consultative Group for International Agricultural Research - CGIAR) மற்றும் அமெரிக்காவிலுள்ள பில் மற்றும் மெலிண்டா கேட்எம் அறக்கட்டளை, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute - IFPRI) மற்றும் மிச்சிகன் மற்றும் கான்சாஸ் மாநில பல்கலைக்கழகங்கள் போன்ற முன்னோடி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சென்று மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள். மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பரிமாற்றம் மூலம் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழம்
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு: இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கான்சாஸ் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சர்வதேச முன்னோடி பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சர்வதேச முன்னோடி பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பல துறைகளில் ஆராய்ச்சி: இது தவிர, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் க்ரான்ஃபீல்ட் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் ப்ரானிஷ்வீக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நெதர்லாந்தில் உள்ள புவி தகவல் மற்றும் கண்காணிப்பு மையம், ட்வெண்டே பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சென்று தாவர அறிவியல், மணி மற்றும் நீர் பாதுகாப்பு, ட்ரோன் பயன்பாடுகள், விவசாய பயன்பாடுகளில் புவி சார்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற துறைகளில் ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அமெரிக்காவில் பன்னாட்டு பல்கலைக்கழகத்தினருடன் கோவை  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர்..
அமெரிக்காவில் பன்னாட்டு பல்கலைக்கழகத்தினருடன் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர்..

வெளிநாடுகளில் வேளாண் கல்விக்கு வழிவகை: அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பயிலும் மாணவர்கள் திறன் மேம்படுவதற்காக மேற்குறிப்பிட்ட, அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தங்கள் பயிற்சிப் படிப்பை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களைத் திறம்பட பயன்படுத்துவதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புவி தகவல் மற்றும் கண்காணிப்பு மையம், ட்வென்டே பல்கலைக்கழகம் மற்றும் சென்னை சர்வதேச ஸ்டார்ட் அப் பார்ம்வைஸ் ஆகியவற்றுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

வேளாண் கல்விக்கு பன்னாட்டு நிதி: இதற்காக, டிஜிட்டல் மேப்பிங், விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடுகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன. துணைவேந்தரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் வேளாண் பல்கலைக்கழகம் வரும் காலத்தில் பல வேளாண் திட்டங்களை பல்கலைக்கழக வளர்ச்சிக்காக, பன்னாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்த இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: விளைபொருட்களை தலையில் சுமக்கும் நிலைக்கு தீர்வு - சென்னை ஐஐடி புதிய கண்டுபிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.