ETV Bharat / state

நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர் படகு.. கோவையில் உள்ள தனியார் நிறுவனம் அசத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 7:11 AM IST

Updated : Nov 22, 2023, 11:42 AM IST

Rover craft boat
நீரிலும், நிலத்திலும் செல்லும் ரோவர் படகு

Rover craft boat: நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் செல்லும் வகையில், ஹோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்து அசத்தியுள்ளது.

நீரிலும், நிலத்திலும் செல்லும் ரோவர் படகு

கோயம்புத்தூர்: சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த யூரோடெக் சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ட்ரில்லிங் மெஷின், கிரைண்டிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களைத் தயாரித்து 45க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் இயங்கும் வகையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஹோவர் கிராப்ட் படகு ஒன்றை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் சோதனையோட்டம், சூலூரில் உள்ள சின்ன குளத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படை பாதுகாப்புடன் நடைபெற்றது. ஹோவர் கிராப்ட் படகு நீரில் சீறிப்பாய்ந்ததை, அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் ஆர்வத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்தனர்.

இது குறித்து யூரோடெக் சொல்யூஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுப்ரதா சந்திரசேகர் கூறுகையில், "நாட்டிலேயே முதல் முறையாக நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் வகையில் ஹோவர் கிராப்ட் படகை தயாரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது‌. நீர் மற்றும் நிலத்தில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்திலும், பனி படர்ந்த இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில் இந்த ஹோவர் கிராப்ட் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹோவர் கிராப்ட் புயல், வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைக்காகவும், கடலோர பாதுகாப்பு மற்றும் கப்பற்படையின் கண்காணிப்பு பணிகளுக்காகவும், அவசர காலங்களில் மருத்துவ தேவைக்காகவும் பயன்படுத்த முடியும். இதில் 1 மணி நேரத்திற்கு சுமார் 20 முதல் 25 லிட்டர் வரை எரிபொருள் செலவாகும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "டாஸ்மாக் முடப்பட்டது இழப்பீடாக கருத முடியுமா?" - சென்னை உயர் நீதிமன்றம்!

Last Updated :Nov 22, 2023, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.