ETV Bharat / state

ஆழியார் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

author img

By

Published : Nov 4, 2019, 3:17 PM IST

pollachi-aliyar-dam-water-opening

கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மலர்த்தூவி வரவேற்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணைக்குள்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திலிருந்து பாசனத்திற்காக பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக விளை நிலங்கள் உள்ளன. இந்தாண்டுக்கான முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் முதலமைச்சரிடம் கோரிக்கைவைத்தனர். அதன்படி இன்று பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன் புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய் ஆகிய கால்வாய்களை ஆழியார் அணையில் உள்ள கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆழியார் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

அதையடுத்து திறக்கப்பட்ட பாசன தண்ணீர் கால்வாய் வழியாக வந்தபோது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்றனர்.

அமைச்சர் வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

மொத்தம் 22 ஆயிரம் 332 ஏக்கர் பாசன பரப்புள்ள நிலத்திற்கு 135 நாள்கள் இடைவெளிவிட்டு 70 நாள்களுக்கு மொத்தம் இரண்டாயிரத்து 250 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளன. ஆழியார் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: முதல் போக பாசன வசதிக்காக மஞ்சளாறு அணையிலிருந்து நீர் திறப்பு!

Intro:aliyer damBody:aliyer damConclusion:பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்துபாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - அமைச்சர் S.P.வேலுமணி , சட்டபேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
பொள்ளாச்சி - நவம்பர் 4
பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணைக்கு உட்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திலிருந்து பாசனத்திற்காக பொள்ளாச்சி சுற்றியுள்ள பகுதிகளில் அதிக விளை நிலங்கள் உள்ளது, இந்தாண்டுக்கான முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி இன்று பொள்ளாச்சி கால்வாய் வேட்டைகாரன்புதூர் கால்வாய் சேத்துமடை கால்வாய் ஆழியாறு ஊட்டுக்கால்வாய் ஆகிய கால்வாய்களை ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் உத்தரவு விட்டதையடுத்து, இன்று ஆழியார் அணையில்உள்ள கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க பட்டது, திறக்கபட்ட பாசன தண்ணீர் கால்வாய் வழியாக வந்தபோது, அமைச்சர் எஸ்.பி .வேலுமணி, சட்டபேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சியர் ராசா மணி மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர், மொத்தம் 22332 ஏக்கர் பாசன பரப்பு உள்ள பூமி களுக்கு 135 நாட்கள் இடைவெளிவிட்டு 70 நாட்களுக்கு மொத்தம் 2250 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனால் சாகுபாடி செய்யபடும் நெல், வாழை, தென்னன மரங்களுக்கு. பயன் பெரும், ஆழியார் அணையில் பாசனத்திற்கு தண்ணிர் திறக்க பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர், இதில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்கஸ்தூரி வாசு, கோவை மாவட்ட மத்தியகூட்றவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் அமைச்சர் தாமேதரன், கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.