ETV Bharat / state

பொள்ளாச்சியில் வியப்பில் ஆழ்த்திய பலூன் திருவிழா.. மகிழ்ச்சியில் மக்கள்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 10:42 PM IST

பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா
பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா

Pollachi Balloon festival: பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கிய நிலையில் பலூனில் பறக்க அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக 9வது சர்வதேச பலூன் திருவிழா இன்று (ஜனவரி 13) தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக இந்த பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டு சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட் போன்ற 8 நாடுகளில் இருந்து, 11 வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குழந்தைகளைக் கவரும் வகையில், தவளை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன. இதைப் பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். மேலும், 3 நாட்களும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

நிலை நிறுத்தப்பட்ட பலூனில் ஏற ஒரு நபருக்கு 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பலூன் திருவிழாவை முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பலூன் திருவிழாவைக் காண வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், அதிகாலை வானில் பறந்த பலூன்கள் அணிவகுத்துச் செல்வது பார்ப்பதற்குக் கண் கவரும் விதமாக உள்ளது எனவும் புதிதாகக் குழந்தைகளைக் கவரும் விதமாக பலூன்கள் உள்ளது என்றார். மேலும், தற்போது வெளிநாட்டினர் மட்டுமே பலூனில் பறக்க அனுமதி அளிக்கப்படுகின்றனர். பலூனில் பறக்கப் பொதுமக்களும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சர்வதேச பலூன் திருவிழாவிற்குத் தமிழக முதலமைச்சரின் சிறப்பு நிதி, சுகாதாரத்துறை,காவல்துறை தீயணைப்பு,108 ஆம்புலன்ஸ் வசதி,பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பயன்படுத்தக்கூடிய துறைகளில் அனுமதி வாங்காததால் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாக வருவாய்த்துறை என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எப்போ பொங்கலிடணும்? பூஜை எப்படி செய்யணும்? முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கோங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.