ETV Bharat / state

ஈஷா யோகா மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

author img

By

Published : Aug 15, 2022, 9:57 PM IST

சுதந்திர தின விழா கொண்டாட்டம்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஈஷா யோகா மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினவிழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மைய நிறுவன வாசுதேவ், சிறப்பு அழைப்பாளர்களாக காமன்வெல்த் போட்டியின் பொதுச் செயலாளர் பெட்ரீசா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும் ஜி20 அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஹர்த்வர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய கொடியை காமன்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரீசா ஏற்றினார்.

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பொதுமக்களும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் சிறப்பு உழைப்பாளர்களும் கண்டு களித்தனர். இதில் சிறப்பாக அழைப்பாளர்கள் மற்றும் ஈஷா யோகா மையம் நிறுவனர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஈசா யோகா மைய நிறுவனர் வாசுதேவ், 75வது சுதந்திர தின விழா மிகவும் மகத்தான நாள் மக்களின் உறுதி தான் இதில் உள்ளது மக்களின் உறுதியினாலும் தெம்பினாலும் நாடு முன்னேற்றத்துடன் செல்ல முடியும். தமிழ் என்றாலே தெம்பு தான். அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய நாடு மகத்தான நாடாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வெயில் காலங்களில் மண்ணைக் காப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து விவசாயிகளின் நலனுக்காக செயல்பட உள்ளோம்.

கயானா என்ற தேசத்தில் 100 சதுர கிலோமீட்டர் அளவுக்கு நிலத்தை விவசாயிகள் மண் காப்போம் இயக்கத்திற்காக அளித்துள்ளனர். இரண்டு வருடத்தில் அம்மண்ணில் உயிரூட்டம் தருவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நிலங்களிலும் கட்டிடங்கள் கட்டி விட்டால் 10,20 வருடங்களில் பாலைவனமாக மாறினாலும் யாரும் கேட்க முடியாது.

எனவே இதற்கு நீதி முறையில் மண்வளத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரதமர் மூன்று நாட்களுக்கு தேசியக்கொடி ஏற்றியது குறித்து கருத்து தெரிவித்த அவர் தேசியக்கொடி என்பது நாட்டிற்கு ஒரு அறிகுறி பாரத தேசம் என்பதே தனி உலகம் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு தேசியக் கொடியில் உள்ள மூவரணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டும். இந்த நடைமுறை ஒருமுறை வந்து விட்டாலே தொடர்ந்து அனைவரும் காலங்களில் பின்பற்றுவர் மண் காப்போம் இயக்கம் முடிந்து நம் நாட்டில் கால் வைத்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.