ETV Bharat / state

பொம்மனிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை திடீர் மரணம் - வனத்துறை விளக்கம் என்ன?

author img

By

Published : Mar 31, 2023, 9:51 AM IST

Updated : Mar 31, 2023, 10:00 AM IST

Etv Bharat
Etv Bharat

தருமபுரியில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானை தெப்பக்காட்டிற்கு பராமரிப்பிற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த யானைக் குட்டி உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை: இதுகுறித்து தெப்பக்காடு யானைகள் முகாம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தருமபுரியில் தாயை பிரிந்து கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையைப் பொம்மன்(யானை பராமரிப்பாளர்) மூலம் மீட்டு 16.03.2023 அன்று முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. உதவி வனக் கால்நடை மருத்துவர் மருத்துவர் ராஜேஷ் குமார் ஆலோசனையின் படி குட்டி யானைக்குத் திரவ உணவுகள் வழங்கப்பட்டு பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி மூலம் தினசரி கண்காணிக்கப்பட்டு வந்தது.

பொதுவாக யானை குட்டிகளுக்கு மனிதர்கள் உட்கொள்ளும் லேக்டோஜன் பால்பவுடரை தான் உணவாக அளிக்கிறோம். இந்த லேக்டோஜினை செரிப்பதற்கான என்சைம் யானைகளில் சுரப்பது மிகவும் குறைவு. முக்கியமாக அம்மாக்களினால் கைவிடப்பட்ட இந்த மாதிரி குட்டிகளுக்கு இந்த என்சைம்கள் சுரப்பது மிக மிக குறைவு. எனவே லேக்டோஜன் செரிமானம் ஆகாமல் சிறிது சிறிதாக உடலில் சேகரம் ஆகும்.

இந்த மாதிரி லேக்டோஜன் சேகரம் ஆவது திடீரென்று ஏற்படும் டையேரியா மூலம் தான் நமக்கு தெரிய வரும். அப்பொழுதுதான் டையேரியா தொடர்ச்சியாக இருக்கும். அதற்கு முன்னால் இதனுடைய அறிகுறி வெளியே தெரியாது. ஆனால் குட்டி ஆக்டிவாகத் இருக்கும். நன்றாக விளையாடும். இந்த குட்டியும் இதே போல் தான் இருந்தது. இந்த லாக்டோஜன் செரிமானம் ஆகாமல் சேகரமாகி ரத்தத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதனால் திடீரென்று டையேரியவாக போகும். அவ்வாறு தான் இந்த குட்டிக்கும் தீடீரென்று நேற்று மதியம் டையேரியா ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் கலைவாணன், ஸ்ரீதர் மற்றும் ராஜேஷ் ஆகியோர்கள் தெரிவித்தார்கள்.

அவர்களின் அறிவுரைப் படி மருந்துகள் குளுகோஸ் மூலம் கொடுக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி யானை குட்டி இரவு 1 மணி அளவில் இறந்து விட்டது. ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்திருக்கக் கூடும், ஆனால் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் முழுமையான காரணம் தெரிய வரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி குட்டி யானையுடன் பொம்மன் புகைப்படம்
கடந்த 17ம் தேதி குட்டி யானையுடன் பொம்மன் புகைப்படம்

இதையும் படிங்க: "மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்புவது போல் உள்ளது" - ஈபிஎஸ்-ஐ விளாசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Last Updated :Mar 31, 2023, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.