ETV Bharat / entertainment

அனிருத்தின் கம்பேக் மியூசிக்கில் வெளியானது இந்தியன் 2 படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கிள் பாரா! - Indian 2 First single paaraa

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 8:28 PM IST

Indian 2 First Single: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் முதல் சிங்கிள் ’பாரா’ பாடல் வெளியாகி உள்ளது.

பாரா பாடல் போஸ்டர்
பாரா பாடல் போஸ்டர் (credits - you tube / sony music south)

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் முதல் பாடலான பாரா என்ற பாடல் இன்று வெளியாகும் என படக்குழு ப்ரோமோ மூலம் நேற்று அறிவித்தது.

அதன்படி, பாரா என்ற முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது. “என் தாய் மண் மேல் ஆணை” என பாடலாசிரியர் பா.விஜய் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக, இப்படத்திலிருந்து வெளியான இந்தியன் தாத்தா அறிமுக வீடியோவில் அனிருத் இசையமைத்த கம்பேக் இந்தியன் தீம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த தீம் பாடல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரா பாடலை அனிருத் கொடுத்துள்ளார் என தெரிகிறது. மேலும், இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் ஜூன்.1ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: "காமெடி பண்றவங்கள யாரும் குறைச்சு நினைக்காதீங்க".. சிவகார்த்திகேயன் கருத்து! - Sivakarthikeyan About Soori

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.