ETV Bharat / state

முகக்கவசம் அணியாமலிருந்த தி சென்னை சில்க்ஸ் ஊழியர்களுக்கு ரூ.5000 அபராதம்!

author img

By

Published : Jan 3, 2022, 7:21 PM IST

தி சென்னை சில்க்ஸ்
தி சென்னை சில்க்ஸ்

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்த கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் 25 பேருக்கு தலா 200 ரூபாய் வீதம் என 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்: கோவையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜனவரி 2) மாலை கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடை முன்பாக வாடிக்கையாளர்களைக் கவரும்விதத்தில் டிரம்ஸ் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

அபராதம் விதிப்பு
அபராதம் விதிப்பு

மேலும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்த நிலையில் அங்குச் சோதனைக்குச் சென்ற கோவை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் இருந்த ஊழியர்கள் 25 பேருக்கு தலா 200 ரூபாய் வீதம் என ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கரோனா வழிமுறைகளை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான துணிக்கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றுவதை நிறுவனத்தினர் உறுதிசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'ஃபிளக்சிபில் அண்ட் டைனமிக் முதலமைச்சர்... ஸ்டாலினைப் பாராட்டிய ஆளுநர்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.