ETV Bharat / state

நோ பார்கிங்கில் நிறுத்தபட்ட வாகனங்களுக்கு பூட்டு போட்ட மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Oct 11, 2019, 1:58 PM IST

கோவை: ஆட்சியர் வாகனம் உள்ளே செல்ல முடியாதவாறு இடையூறாக வாகனங்கள் நிறுத்தபட்டு இருப்பதை கண்ட ஆட்சியர் அந்த வாகனங்களுக்கு பூட்டுப் போட போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

No parking vehicles

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்துச் செல்வது வழக்கம். அவ்வப்போது அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதும் வழக்கமான ஒன்று. இக்கூட்டதிற்கு நான்கு சக்கர வாகனத்தில் வரும் அதிகாரிகள் அலுவலக வாயில் முன்பும், அதற்கு பின்புறம் உள்ள காலியிடத்திலும் நிறுத்துவார்கள்.

இதே போல இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கபட்டு இருந்தும் இங்கு வருபவர்கள் ஆங்காங்கே நிறுத்திச் சென்று விடுகின்றனர். இதனால் நாள்தோறும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அலுவகதிற்கு வந்த ஆட்சியர் வாகனம் உள்ளே செல்ல முடியாதவாறு இடையூறாக வாகனங்கள் நிறுத்தபட்டு இருப்பதை கண்ட அவர் அந்த வாகனங்களுக்கு பூட்டு போட போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வாகனங்களுக்கு பூட்டு போட்ட மாவட்ட ஆட்சியர்

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தபட்டிருந்த இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பிணைத்து பூட்டு போட்டதுடன் அபராதமும் விதித்தனர். அந்த வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களின் வாகனங்கள் என்பது விசாரனையில் தெரிய வந்தது. மேலும் அபராதம் விதிக்கபட்டவர்கள் ஆட்சியரை சந்தித்து விளக்கமளித்த பிறகே வாகனங்களில் போடபட்ட பூட்டு அகற்றப்படும் என காவல்துறையினர் தெரிவித்தைத் தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து தங்களது தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: 'இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை' - டாக்டர். கிருஷ்ணசாமி அறிவிப்பு

Intro:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோ பார்கிங் பகுதியில் நிறுத்தபட்ட வாகனதிற்கு பூட்டு போட வைத்த மாவட்ட ஆட்சியர்.
Body:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.அவ்வப்போது அரசு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெறுவதும் வழக்கமான ஒன்று.இக்கூட்டதிற்கு நான்கு சக்கர வாகனத்தில் வரும் அதிகாரிகள் அலுவலக வாயில் முன்பும் அதற்கு பின்னால் உள்ள இடத்தில் நிறுத்துவார்கள்.இதே போல
இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கபட்டு இருந்தும் இங்கு வருபவர்கள் ஆங்காங்கே நிறுத்தி சென்று விடுகின்றனர்.இதனால் நாள்தோறும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அலுவகதிற்கு வந்த ஆட்சியர் வாகனம் உள்ளே செல்ல முடியாதவாறு இடையூறாக வாகனங்கள் நிறுத்தபட்டு இருப்பதை கண்ட அவர் அந்த வாகனங்களுக்கு பூட்டு போட போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தபட்ட இருசக்கர வாகனங்களுக்கு செயின் கொண்டு பூட்டு போட்டதுடன் அபராதமும் விதித்தனர்.அந்த வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களின் வாகனம் என்பது விசாரனையில் தெரிய வந்தது.மேலும் அபராதம் விதிக்கபட்டவர்கள் ஆட்சியர் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதால் அவரை சந்தித்த பிறகே வாகனங்களில் போடபட்ட பூட்டு அகற்ற படும் என காவல்துறையினர் தெரிவித்தை தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து தங்களது தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.