ETV Bharat / state

'இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை' - டாக்டர். கிருஷ்ணசாமி அறிவிப்பு

author img

By

Published : Oct 10, 2019, 10:14 PM IST

சென்னை: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

dr-krishnasamy

2019 மக்களவை தேர்தலின் போது அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று டாக்டர். கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருந்தது.

dr-krishnasamy
டாக்டர். கிருஷ்ணசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம்

கூட்டணியின் போது மிக முக்கிய கோரிக்கையை முதலமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தோம். மருதநில மக்களாக குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் ஆறு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவந்திர குல வேளாளராக அழைத்திட அரசாணை வெளியிட வேண்டும் என்றும், அந்த மக்கள் தற்போது இடம்பெற்றுள்ள பட்டியல் பிரிவிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தோம்.

தேர்தல் முடிந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றோம். ஆனால் தேர்தல் முடிந்து இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தேவந்திர குல மக்கள் தேர்தலை புறக்கணித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மதிப்பு அளிக்கக்கூடிய வகையில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை.

dr-krishnasamy
மக்களவை தேர்தல் பரப்புரையின் போது

நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம். எனவே இதேபோன்று ஒரு வாக்குறுதியை நம்பி புதிய தமிழகம் கட்சி இனியும் ஆதரவு தெரிவிக்க வழியில்லை. அரசாணை வெளியிடும் வரை ஆதரவு அளிக்கப் போவதில்லை' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...

‘மாவட்டங்களைப் பிரிப்பதால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது’ - கே. பாலகிருஷ்ணன்

Intro:Body:நாடாளுமன்ற கூட்டணியில் வலியுறுத்திய கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றாததால் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழகத்தில் 21 ஆம் தேதி நடைபெறயிருக்கின்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் புதிய தமிழகம் கட்சி எப்படிப்பட்ட நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று இன்று எனது தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் மொத்தம் 18 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். அதில் சிறப்பு தீர்மானங்களாக நாளை தமிழகத்துக்கு வரயிருக்கும் சீன தேசத்து அதிபர் ஸி ஜிங்பின்னும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் சந்திக்கவுள்ளனர். அவர்களின் வருகையை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்யும்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலும் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றது. அப்போது மிக முக்கிய கோரிக்கையை முதல்வரிடத்தில் வைத்தோம். மருதநில மக்களாக குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் ஆறு உட்பிரிவுகளை ஒன்றாகி தேவந்திர குல வேளாளராக அழைத்திட அரசாணை வெளியி வேண்டும் என்றும் அந்த மகக்ள் தற்போது இடம்பெற்றுள்ள பட்டியல் பிரிவிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியிலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தேர்தல் முடிந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்ததால் நாங்கள் அ.இ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றோம்.

ஆனால் தேர்தல் முடிந்து இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்ற படவில்லை. முதல்வர் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தேவந்திர குல மக்கள் தேர்தலை புறக்கணித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மதிப்பு அளிக்கக்கூடிய வகையில் அ.தி.மு.க வுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.முக. வுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் ஆதரவு இல்லை என்றும் முடிவு செய்துள்ளோம்.

நாடாளுமன்ற தோல்வியினால் அ.இ.அ.தி.மு.க வுக்கு ஒரு சோர்வு இருக்கும் என்பதால் ஜீன், ஜுலை மாதங்களில் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் ஆகஸ்ட் மாதம் எழுதிய கடிதத்துக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அ.தி.முக. வுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

2010 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோது அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று பல அ.தி.முக. உறுப்பினர்கள் தி.மு.க வில் இணைந்துகொண்டிருந்த காலம் அப்போதும் ஜெயலலிதாவை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தோம். ஆனால் தேர்தலுக்கு பின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம். எனவே இதேபோன்று ஒரு வாக்குறுதி நம்பி புதிய தமிழகம் கட்சி இனியும் ஆதரவு தெரிவிக்க வழியில்லை. அரசாணை வெளியிடும் வரை ஆதரவு அளிக்கப போவதில்லை" என்று தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எல்லா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறுகிறார் என்ற கேள்விக்கு, "எல்லாமே பேச்சாக இருந்தால் எப்படி. தொடர்ந்து நாங்கள் ஏமாற்றப் படுகிறோம்" என்று
கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.